NATIONAL

எங்கும் தீபாவளி கொண்டாட்டம்

திரியாங், அக்டோபர் 15:

தீபாவளி எதிர் வரும் அக்டோபர் 18-இல் கொண்டாடப்படும் வேளையில் பல இடங்களில் முன்கூட்டியே தீபாவளி விருந்துபசரிப்பு நடந்துக் கொண்டு இருக்கிறது. பகாங் திரியாங் நகரில், தாமான் மாஜூவில் பாக்தாத்தான் பார்ப்பான் கூட்டணி சார்பில் ஸாக்காரியா ஹாமிட் தலைமையில் தீபாவளி விருந்துபசரிப்பு இன்று நடைபெற்றது.

பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரா கெஅடிலான் தொகுதி தலைவர் ஸாக்காரியாவோடு சாபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி, திரியாங் சட்ட மன்ற உறுப்பினர் லியோங் யூமான், இந்திய தலைவர்கள் சரவணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட வேளையில் மூத்த குடிமக்களுக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து தாமான் சாகா, தெமர்லோவில் பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்களின் தீபாவளி விருந்துபசரிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் மெந்தக்காப் சட்ட மன்ற உறுப்பினர் தெங்கு ஸூல்பூரியுடன் ஸக்காரியா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

#கெஜிஎஸ்


Pengarang :