SELANGOR

கிள்ளான் வர்த்தகர் சங்கங்கள், கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு ஆதரவு

கிள்ளான், அக்டோபர் 10:

கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கிள்ளான் வர்த்தகர் சங்கமும் வவாசான் சிறுத்தொழில் வர்த்தகர்கள் சங்கமும் ஆதரவு கொடுப்பதாக அதன் தலைவர்களான திரு.என்.பி.இராமன் மற்றும் திரு.தர்மா ஆகியோர் தெரிவித்தனர்.அவர்கள் எம்.பி.கேவின் தலைவர் டத்தோ யாசிட் பின் பிடீன் அவர்களை சந்தித்தப் பின்னர் இதனை தெரிவித்தனர்.
அதேவேளையில்,அன்மையில் கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு வருகை அளித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த அவர்கள் இம்மாதிரி ஆர்ப்பாட்டம் செய்வதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் சுமூகமாய் பேசி தீர்க்க வேண்டிய விவகாரத்தை தனிப்பட்ட காரணியங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்து கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்த முனைவது அர்த்தமற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவரோடு மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது தீபாவளியை முன்னிட்டு தெங்கு கிள்ளான் பகுதியை வண்ண விளக்குகளால் ஒளியூட்டும்படியும் தோரணங்களால் பிரகாசப்படுத்தும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டதோடு தெங்கு கிள்ளானாவை பாரம்பரியம் மிக்க சூழலுக்கு உருவாக்கும் படியும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையில்,தீபாவளி காலத்தில் தெங்கு கிள்ளானாவில் அதிகமான வாடிக்கையாளர்கள் வருகை புரிய விருக்கும் நிலையில் அவர்கள் நிறுத்தி வைக்கும் கார்களை இழுத்து செல்லும் நடவடிக்கையினை எம்பிகே தற்காலிகமாய் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர்கள் தீபாவளிக்கு பின்னர் தவறான இடத்தில் கார்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக குறைவான கட்டணத்தை விதிக்கும்படியும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில் தெங்கு கிள்ளானாவில் தீபாவளிக்கு வியபாரம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 விழுகாடு கழிவினை கொடுத்த எம்பிகேவை பாராட்டியதோடு அஃது பரிவு மிக்க செயல்பாடு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இச்சந்திப்பின் போது எம்பிகேவின் லைசன்ஸ் பிரிவு தலைமை அதிகாரி,சுகாதார துறை தலைமை அதிகாரி ஆகியோருடன் இந்திய கவுன்சிலர்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :