NATIONAL

கெஅடிலான் இளைஞர் தலைவர்: ‘ஒரே மலேசியா கடை’ பெருந்திட்டத்தின் தோல்விக்கு நஜிப் பொறுப்பேற்க வேண்டும்

ஷா ஆலம்,அக்டோபர் 5

ஒரே மலேசியா மக்கள் கடை பிணையம் ( )  தோல்விக்கு நஜீப் பொறுப்பேற்க வேண்டும் என்று கெஅடிலான் இளைஞர் படைத்தலைவர் நிக் நஸ்மி
வலியுறுத்தினார்.

நஜிப் நிர்வாகம் மீண்டும் KR1M திட்டத்தையும், மற்ற 1 மலேசியா
திட்டங்களையும் திட்டமிட்டுவதில்  தோல்வியைக் கண்டுள்ளதாகவும் மக்கள் மத்தியில் இது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்று  அவர் சுட்டிக்காட்டினார்.

வாழ்வாதார செலவுகள் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் சேவை வரி திணிப்பு, குறைந்த சம்பளமும் கூலியும் போன்ற முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட
வேண்டும், இந்த தோல்விகளை எல்லாம் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் நெருங்கிவிட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர்  அமைச்சு (KPDNKK), வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக விருப்பங்களை
வழங்குவதற்கு மட்டுமே தற்காலிகமாக KR1M பிணையம் மூடப்படுகிறது   என்று
கூறிவருகிறது.

ஆயிரக்கணக்கான KR1M ஊழியர்களின் தலைவிதி இப்போது இந்தத்  திட்டத்தின் ஒப்பந்தக்காரர் மைடின் முகமட் ஹோல்டிங்ஸ்(Mydin). கையில் உள்ள  என்றார்
அவர். இருப்பினும் அரசாங்கத்தின் இத்திட்டத்தினால் பெரும் இழப்புக்களை சந்தித்ததாக மைடின் தரப்பு குற்றம் சாட்டுவதாக நஸ்மி தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பில் மைதீனை குறை கூறுவதும் மைதீன் தரப்பில் அரசாங்கத்தைக் கூறுவதும் இவர்கள் எவரும் இதற்கு பொறுப்பேற்க தயார் நிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது. வர்த்தக சமூக நலத் திட்டமாக இதனை மைதீன்
பார்க்கிறது. இத்திட்டத்தில் பணிபுரிந்த ஆயிரமாயிரம் தொழிலார்களின் நிலை கேள்விக்கு குறியில் உள்ளதாக நஸ்மி தெரிவித்தார்.

#சரவணன்


Pengarang :