SELANGOR

சிலாங்கூரின் வளர்ச்சி அந்நிய முதலீடுகளை கவந்துள்ளது

பத்துகேவ்ஸ், அக்டோபர் 11:

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாடும் வளர்ச்சியும் அந்நிய முதலீடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு அவர்களின் ஆர்வத்தையும் அதிகப்படுத்தியிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பெருமிதமாய் கூறினார்.சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாடுகளும் பொருளாதார இலக்கும் பெருமைப்பட வைக்கும் நிலையில் இருப்பதோடு அஃது அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் கருவூலமாகவும் உருவெடுத்திருப்பதாகவும் கூறினார்.

அண்மையில் தமது ஐந்து நாள் இந்தியா பயணம் அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறிய அவர் சிலாங்கூர் மாநில மேம்ப்பாட்டையும் வளர்ச்சியையும் அதேவேளையில் அதன் அடைவுநிலையையும் எவ்வாறு உலக ரீதியில் கொண்டு செல்வது என்பதையும் ஆராய்ந்து வரும் நிலையில் உலக ரீதியிலான கைகோர்ப்பு சிலாங்கூர் மாநிலத்தை புதியதொரு தலம் நோக்கி கொண்டு செல்வதோடு அஃது சிலாங்கூர் வாழ் மக்களும்,வர்த்தகர்களுக்கும் நன்மையை வழங்குவதோடு சிலாங்கூர் மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றும் என்றார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆய்வுகள் சிலாங்கூர் மாநிலம் முதலீட்டுக்கு பாதுகாப்பான மற்றும் சரியான இடம் என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதை பெருமையாக சுட்டிக்காண்பித்த மந்திரி பெசார் பல்லின மக்களும் மத நம்பிக்கையும் கொண்டவர்கள் சிலாங்கூர் மாநிலம் மற்றும் நாட்டின் தனித்துவமாய் விளங்கிடும் நிலையில் அஃது மாநில வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுவதோடு மட்டுமின்றி அந்நிய முதலீடுகளுக்கும் வகை செய்கிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஐட்ராபாட் ஆகிய மாநிலங்களுக்கு பயணத்தை மேற்கொண்ட் நிலையில் அவ்விரு மாநிலங்களின் வளர்ச்சியும் மேம்பாடும் பல்வேறு துறைகளில் இருக்கும் சூழலில் சிலாங்கூர் மாநிலம் அதற்கு ஏற்றவாறு அமைந்திருப்பதால் அவர்களின் முதலீடு இங்கு சாத்தியமே என்றார்.

அதுபோலவே,அந்நிய முதலீடுகளுக்கு இந்தியாவும் ஆர்வம் காட்டுவது சிறப்பான ஒன்றாக அமைந்திருப்பதாகவும் கூறினார்.
நம்மிடையே மேலோங்கியிருக்கும் விட்டுக் கொடுத்தல்,புரிந்துணர்வு மற்றும் உதவும் மனப்போக்கு அந்நிய முதலீடுகளை கவர்ந்திருப்பதாகவும் கூறிய அவர் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலையான ஆற்றல் மிக்க போக்கும் அந்நிய முதலீட்டின் கவனத்தை தனித்துவமாய் ஈர்த்திருப்பதாகவும் கூறினார்.

அதேவேளையில்,சிலாங்கூர் மாநிலம் சிறந்த மாநிலமாகவும் வளர்ச்சியும் மேம்பாடும் கொண்ட மாநிலமாகவும் உருபெற்றிருக்கும் சூழலில் மக்களும் நன் நிலையிலான பயனையும் நன்மையையும் அடைந்து வருவது பெருமிதமாகவும் சந்தோசமாகவும் இருப்பதாக மந்திரி பெசார் தெரிவித்தார்.


Pengarang :