NATIONAL

சிலாங்கூரில் மட்டுமே கிடைக்கும்

சபாக்  பெர்ணாம்,அக்டோபர் 6:

5A நோட்டீஸ் பெறுநருக்கு  மிகக் குறைந்த ‘பிரீமியம்’ கட்டண  வழிமுறை சிலாங்கூர் மட்டுமே கிடைக்கும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். தற்போதைய பிரீமியம் மதிப்புடன் ஒப்பிடுகையில், ஒவ்வொரு பெறுநரும் பிரீமியம் விகிதம் RM1,000 வெள்ளி மட்டுமே செலுத்த வேண்டும் என்று
அஸ்மின் தெரிவித்தார். வேளாண்மை நிலத்திற்கு தற்போதைய பிரீமியம் மதிப்பு நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டை எட்டும் என்று அஸ்மின் தெரிவித்தார்.

இருப்பினும், பெறுநர்  ஒரு மூன்றாம் தரப்பினருக்கு நிலத்தை விற்க
முடியாது.  குடியிருப்பு மற்றும் விவசாய நோக்கங்களுக்காக நிலத்தை நன்கு பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அஸ்மின் கூறினார். உதாரணமாக, இங்கு மலாய் இருப்பு நிலத்திற்கான தற்போதைய பிரீமியம் மதிப்பானது, 1,000 சதுர மீட்டர் அளவுக்கு RM68,000  வெள்ளியாகும்.அதே நேரத்தில் விவசாய நிலம் ஏக்கருக்கு RM80,000 வெள்ளியாகும். இருப்பினும் மாநில அரசாங்கம்  ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் பிரீமியத்தை 1000 வெள்ளியாக நிர்ணயித்து உள்ளது. இது எங்கும் கிடைக்கப்பெறாத கழிவு என்கிறார்
அஸ்மின்.

கம்போங் ஹாலா சாரா பாரு மண்டபத்தில் நடந்த  5A நோட்டிஸ் வழங்குதல் மற்றும் மக்கள் கருணை திட்ட  முன்முயற்சி (ஐபிஆர்) நிகழ்ச்சியை நிறைவு செய்யும் பொழுது நிருபர்களிடம் அவர் இவ்வாறு கூறினார். தசாப்தங்களாகக் காத்திருந்த கம்போங் ஹாலா சாரா பாரு 48 குடிவாசிகளுக்கும் கம்போங்
பெலியாவைச் சேர்ந்த 4 குடிவாசிகளுக்கும் 5A நோட்டிஸ் வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின்படி, ஹிஜ்ரா பங்கேற்பாளர்கள் 78 பேர் மைக்ரோகிரெடிட் கடன்
திட்டத்தின் மூலம்
மொத்தம் RM592,000 கடன் தொகையைப்  பெற்றுக் கொண்டனர்.

#சரவணன்


Pengarang :