Kastam Diraja Malaysia membuat lebihan bayaran tuntutan GST bagi 2019 berjumlah RM4.38 juta.
SELANGOR

சிலாங்கூர் அரசாங்கம் வரிவிலக்கும் வேளையில், வரிவிதிக்கும் மத்திய அரசாங்கம்

சபாக்  பெர்ணாம்,அக்டோபர் 6:

கம்போங் டிராடிசி, கம்போங் பாகன், கம்போங் பாரு ஆகிய
முக்கம்பங்களுக்களில்   மதிப்பீட்டு வரி விலக்கு முயற்சி
வெற்றிபெறுவதற்காக  மாநில அரசாங்கம் RM70 மில்லியனுக்கும் மேலாக செலவிட்டுள்ளது. அணுகுமுறை மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டது காரணம் மத்திய அரசாங்கம் பல வரி திணிப்புகள் மூலம் மக்களுக்கு அழுத்தம்  கொண்டு வருவதாக
மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகம்மது அஸ்மின் அலி
தெரிவித்தார்.

இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால் மக்கள் நசுக்கப்படுகின்றனர். மேலும் புத்ராஜெயா நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதாரம் சுருங்கி வருவதாக
அஸ்மின் கூறினார். மக்களுக்கு சுமை சேர்க்கும் பொருட்கள் மற்றும் சேவை வரிகளை ( GST), நாடாளுமன்றத்தில் எதிர்த்து நின்ற கோம்பாக் நாடாளுமன்றத்தின் உறுப்பினரான
அஸ்மின், அதனை ஒப்புக்கொண்ட தஞ்சோங் காரங், சுங்கை பெசார்,சபாக் பெர்னாம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்று அஸ்மின் கூறினார்.

7,ஏப்ரல்,2014-இல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி
மசோதா, 119 வாக்குகள் ஆதரித்தும்,81 வாக்குகள் எதிர்த்தும்  ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 6 ம் தேதி, நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை வாக்கெடுப்பைப் பெற்ற பின்னர், சுற்றுலாத்துறை வரி செப்டம்பர் 1 ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

#சரவணன்

Pengarang :