Malaysia menyasarkan kemasukan 30 juta pelancong tahun ini. Foto arkib SELANGORKINI
SELANGORTOURISM

சிலாங்கூர் மாநிலத்தில் ஜப்பானிய சுற்றுலா பயணிகள்அதிகரிப்பு

ஷா ஆலம்,அக்டோபர் 4:

சிலாங்கூர் மாநிலத்தில் ஜப்பானியர் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை  211.38 சதவீதம் அதிகரிதுத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில்,இவ்வாண்டு,ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கணக்கெடுப்பில், 40,000 ஜப்பானிய சுற்றுப்பயணிகள் கூடுதலாக சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகைப்புரிந்துள்ளதை சுற்றுலாத்துறை கணக்கெடுப்பு காட்டுகிறது.

சிலாங்கூர் சுற்றுலாத் துறை மேலாளர், நூருல் அஷிகின் முகமதுதின் கூறுகையில், ஜப்பானியர் சுற்றுப்பயனைகளைக் கவருவதற்காக அந்நாட்டு
சுற்றுலா முகவர்களிடம் மாநில சுற்றுலாத் துறை ஏற்படுத்திக் கொண்ட ஒத்துழைப்பே ஜப்பானியர் சுற்றுப்பயணிகளின் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றார்.

இவ்வாண்டு, சிலாங்கூர் மாவட்ட மன்றமும், சிலாங்கூர் சுற்றுலாத் துறையும் ஹகுபா  சுற்றுலா அமைப்புடன் இணைந்து செயல்பட வாயுப்புக்களை உருவாக்கிக்
கொள்ளும் என்று  நூருல் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பு, கோலா சிலாங்கூர் மாவட்டத்தையும், ஜப்பான் ஹகுபா கோர்யு சுற்றுலாத் தலங்களை ஊக்குவைப்பதற்காகவும்ஆகும்.

#சரவணன்


Pengarang :