SELANGOR

சிலாங்கூர் மேல் வசதிகள்,உற்பத்தி மற்றும் வெளிநாட்டு வசதிகளில் ‘அரசுக்குரிய மேம்பாட்டு மாநிலமாக’ உருவெடுக்கிறது

ஷா ஆலம், அக்டோபர் 14:
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்துறைகளின் மேம்பாடு கோல்களாக அமைந்து வருகிறது என்று மாநில முதலமைச்சரான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

“எல்லாவற்றிலும் புதுமையையும் புத்தாக்கத்தையும் கொண்டிருக்கும் ‘உயர் தாக்கம்’,’உயர் தொழில்நுட்பம்’ மற்றும் ஆர் என் டி துறைகளிலும் சிறப்பு கவனத்தைச் செலுத்துகிறது சிலாங்கூர். 4.0 தொழில்துறை வளர்ச்சியின் அமைப்பில்,இஃது ஒரு தேர்வு அல்ல,ஒரு தேவையாக அமைகிறது,” என்றார் அவர்.

வளர்ச்சிகண்ட மாநிலமான சிலாங்கூர்,போட்டியிடும் திறனையும் புத்தாக்க சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதிலும் சிறப்பிக்க வேண்டும் என்றார் அவர் மேலும். புத்துணர்ச்சி சிந்தனையைக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களாலும் சமூகத்தினராலும் அமலாக்க செயத்திட்டத்தை பயன்படுத்தி இவ்வணுகுமுறையை
அடையலாம் என்றார்.

“இந்த ‘அரசுக்குரிய மேம்பாட்டு மாநில’ யோசனை,நம் சிந்தனையை
மாற்றுவதற்கும் வேலை பண்பாட்டை அணுகுவதற்கும் இலக்கை அடைவதற்கும் நம்மை
வழிகாட்டுகிறது. ஆகவே,அறிவையும் தகவலையும் அடிப்படையாக வைத்து பொருளாதார வளர்ச்சியை
அடையும் மாநிலமாக சிலாங்கூர் உருவாக,நாம் அனைவரும் முன்மாதிரி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்,” என்று சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஸீஸ் ஷா கட்டிடத்தில் ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடந்த சிலாங்கூர் மாநில அளவிலான புத்தாக்க ஆர்வ சிந்தனை  நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் கூறினார்.

மாநில அரசு செயலாளரான டத்தோ முகமட் அமின் அமாட் யஹ்யா,மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ அமாட் யூனுஸ் ஹைரி மற்றும் டாக்டர் டரோயா அல்வி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :