NATIONAL

பிளஸ்: தீபாவளியை முன்னிட்டு, நாணய மதிப்பைக் கூட்டும் கட்டணச் சாவடி வழிகள் தற்காலிகமாக மூடப்படும்

கோலாலம்பூர்,அக்டோபர் 11:
தீபாவளியை முன்னிட்டு, நாணய மதிப்பைக் கூட்டும் 134 கட்டணச் சாவடி வழிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று  வடக்கு-தெற்கு மலேசிய நெடுஞ்சாலை வரி
மையம் (PLUS) அறிவித்துள்ளது. 17 முதல் 19 அக்டோபர் வரை இந்நிலை நீடிக்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் டத்துக அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

பெருநாள் கொண்டாட்ட நாட்களில் சாலை நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்தில் இம்முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது. இதன் வழி நாணய மதிப்பைக் கூட்டும் வழியில் பயணிகள் காத்திருக்கும் நெரிசல் தவிர்க்கப்படும் என்று இயக்குனர்
தெரிவித்தார், இருப்பினும், புக்கிட் காயு  இத்தாம்பிளாசா சாவடி  மற்றும்
சுல்தான் இஸ்கந்தர் கட்டிடச் சாவடியில் இருக்கும் கூடுதல் மதிப்பு
கட்டணப் பாதைகள் மூடப்படாது என்று அஸ்மான் கூறினார்.

ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக அனைத்துநிறுத்தங்களில் உள்ள  பணம் பட்டுவாடா இயந்திரங்கள், 24 மணி நேர அநேக பொருட்கள் விற்பனைக் கடைகள், வாயு நிலையம் ஆகியஇடங்கள் உட்பட 9,200 இடங்களில் அட்டைக்கான
கட்டண  மதிப்பேற்றம் செய்யும் வசதிகள் உண்டு. நெடுஞ்சாலைப்  பயணர்கள் வழங்கப்பட்டிருக்கும் இந்த வசதிகள்  வழி தங்களுடைய அட்டையைப்  பதிவேற்றம்
செய்து கொள்ளவேண்டும் என்று அதிகாரி தெரிவித்தார்.

சென்ற பெருநாட்களில் எடுக்கப்பட்ட கூடுதல் மதிப்பு கட்டணப் பாதைகள்
மூடுதல் முடிவு சாலை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உதவியதாக அஸ்மான் கூறினார். இம்முறை அடுத்தப்  பெருநாட்காலங்களிலும்
கடைபிடிக்கப்படும் என்று அஸ்மான் தெரிவித்தார்.


Pengarang :