MEDIA STATEMENT

பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் தேவைகளை அம்னோ-பிஎன் அறிந்திருக்கவில்லை

கோலாலம்பூர், அக்டோபர் 4:

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தால் அரசாங்க ஊழியர்களின் எதிர்காலம்
மோசமடையும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கின்  எச்சரிக்கையை
கவனப்படுத்துவதாக கெஅடிலான் கட்சியின் தேசிய கௌரவச் செயலாளர் டத்தோ சைபுடின் நசூத்தியோன் பத்திரிகை அறிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள உறவு பலமாக இருப்பதாக நஜிப் நினைத்திருப்பது மலை ஏறிவிட்டது. நடப்புச் சூழலில் பொதுத் துறையில் பணிசெய்யும் ஊழியர்களுக்கு அரசாங்கத்துடனான உறவு கசந்துவிட்டது, குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் பல காரணங்களை முன்னிட்டு  அம்னோ- தேசிய முன்னணியின் மேல் காட்டமாகவும் ஏமாற்றத்துடனும்
உள்ளனர் என்று சைபுதீன் பத்திரிகை அறிக்கையில் கூறினார்.

அரசாங்க ஊழியர்கள் அல்லல் படுகின்றனர். அவர்களுக்கு உரித்த சலுகைகளை நீக்கியது, பொருட்கள் வரியை விதித்தது போன்ற அரசாங்கத்தின் முடிவுகளினால்
வாழ்வாதாரத்துக்குச் சுமையைச் சேர்த்துக் கொண்டிருக்கும்
அம்னோ-தேசிய முன்னணியின் மேல் அவர்கள் கோபமாகவும் வெறுப்புற்றும் இருக்கின்றனர் என்று சைபுதீன் கூறினார்.

உண்மையிலேயே அம்னோ தேசியமுன்னணியின் அரசாங்கம் நேர்மையாகவும், வெற்றியுடனும் செயல்பட்டிருந்தால் அரசாங்க ஊழியர்களின் ஆதரவு குறைவதற்கு
அச்சப்படத் தேவை இருக்காது. வெற்றி பெற்றவுடன் மக்களை குப்பைகளாக்கி, அனைத்துத் திட்டங்களையும் அவர்களின் சகாக்களுக்கு மட்டுமே தந்து வருவது
நன்றி மறக்கும் குணம் அம்னோ தேசிய முன்னணிதான், அரசாங்க ஊழியர்கள் அல்ல என்பதை சைபுதீன் வலியுறுத்திக் கூறினார்.

அரசியல் தலையீடு  முடிவுக்கு வராத சமூக நலன் போன்றவைகள் அரசுப்
பணியாளர்களை சிறைப்படுத்துகிறது. பொதுத் துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் சக்தி அரசாங்க ஊழியர்களுக்கு உண்டு. வரும் பொதுத் தேர்தலில் இவர்களின்
ஓட்டு அந்த மாற்றங்களைப்  பொதுத் துறையிலும், நாட்டுக்கும் கொண்டு வரும் என்று சைபுதீன் தெரிவித்தார்.

#சரவணன்

Pengarang :