NATIONAL

பொதுத்துறை ஊழியர்களை மிரட்டும் ஜமாலை போலீஸ் விசாரிக்காதது ஏன்?

ஷா ஆலாம்,அக்24 –

மீன் கழுவிய நீரை பெட்டாலிங் ஜெயா மாநகரமன்றத்தின் தலைவர் மீது ஊற்றுவேன் என்று மிரட்டும் சுங்கை பெசார் தொகுதி அம்னோ தலைவரின் போக்கு வரம்பு மீறியது என்று நினைவுறுத்திய கெஅடிலான் கட்சியின் தொடர்புக்குழு தலைவர் பாஃஹமி பட்ஸீர் ஜமால் மீது போலீஸ் விசாரணையை மேற்கொள்ளாதது ஏன் எனும் கேள்வியையும் எழுப்பினார்.

ஜமாலின் இத்தகைய செயல் வன்முறை கொண்டது என்றும் வகைப்படுத்திய அவர் ஜமாலின் இப்போக்கு பொதுத்துறை மற்றும் அரசு ஊழியர்களை கடமையை சரியாக செய்ய விடாமல் அச்சுறுத்துவதற்கு ஈடானது என்றும் நினைவுறுத்தினார்.
ஜமாலின் இச்செயல் குற்றவியல் தன்மையை கொண்டிருப்பதோடு மடுமின்றி அஃது அரசு ஊழியர்களை மதிக்காத நிலையினை புலப்படுத்துகிறது என்றும் கூறிய அவர் போலீஸ் ஜமால் மீது விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில்,ஜமால் பலமுறை வறம்பு மீறி செயல்பட்ட போதிலும் அவர் மீது இதுவரை சட்ட ரீதியில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
மேலும்,ஜமால் மீது சட்டரீதியில் எவ்வித நடவடிக்கையும் அல்லது வழக்கு பதிவு அரசு தரப்பு கொண்டு வராதது ஜமாலை குறிப்பிட்ட ஒரு தரப்பு தற்காத்து வருவதுப்போல் தோன்றுவதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

#ரௌத்திரன்


Pengarang :