MEDIA STATEMENT

மசூதி குடியிருப்பு  விவகாரங்களில் மந்திரி பெசாரின்  செய்தி அறிக்கை

ஷா ஆலம், அக்டோபர் 4:

சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் விமான நிலையம் அருகாமையில் உள்ள 3 வீடுகள் மற்றும் 2 கடைகள் மீது மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாத்
(MAHB) அமலாக்கப் பிரிவு  எடுத்திருக்கும் நடவடிக்கையை மாநில அரசாங்கம் அறிந்துள்ளது.

நான் , வீடுகள் மற்றும் சிலாங்கூர்  ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் (PHSSB)
பொது மேலாளர் நாஸ்மி பின் ஓஸ்மான். அவருடன் உடனடியாக சந்திப்பை மேற்கொண்டேன். இந்த விவாதத்தின் விளைவாக, PHSSB,  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, பிபிஆர் செக்சன்  8 கோத்தா டாமான்சாரா பகுதியில்,
வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு குடும்பங்கள் புதிய இடத்திற்கு மாற்றம் செய்ய  உதவிட PHSSB உடன் இணைந்துசெயல்பட வேண்டும் என்று பெட்டாலிங் வட்டார அதிகாரியைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இரு குடும்பங்களுக்கும் குடியிருப்பு அமையும் வரை,ஆறு மாத காலத்திற்குள் இந்த குடியிருப்பு  வாடகை செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கு மாநில அரசு
ஒப்புக்கொள்கிறது. இந்த முயற்சியானது மாநில அரசாங்கத்தின் கொள்கையாக
செயல்படுத்தப்பட்டுள்ளது.  மக்கள் மேல் அக்கறை கொள்ளும், அவர்களின் சமூக நலனைப் பேணும் மாநிலத்தின் கொள்கையின் அடிப்படையில் இம்முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருகுடும்பங்களுக்கும் நல்வாழ்வு அமையும் வகையில்  வசதியான இடமாக இது அமைந்திருக்கும் என்று மாநில அரசு நம்புகிறது.

டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி


Pengarang :