NATIONAL

மதம், இனம் கடந்த மிதவாத அரசியல் சிந்தனையை ஐடிஇ முன்னெடுப்பு

ஷா ஆலம்,அக்டோபர் 5:

இனம், மதங்களைக் கடந்த ஒரு மிதவாத அரசியல் முன்னுதாரணத்தை
அறிமுகப்படுத்தும் எண்ணத்தை டாருல் எஹ்சான் கல்விக் கழகம் கொண்டுள்ளது.

ஒன்றும் மற்றொன்றும் முழுமையான தொடர்பு கொண்ட இரு முக்கிய  முன்னெடுப்பு
வழியாக இம்முயற்சி தொடரப்பட்டுள்ளது என்று வியூகம் மற்றும் சமூக மேம்பாடு இயக்குனர் டத்தோ சைஃபுதீன் அப்துல்லா தெரிவித்தார்.

ஒன்று பட்டு அமைதியுடன் வாழ்தலும்,பல்லின அரசியல் சிந்தனை மற்றும் மிதவாதம் ஆகிய இரு முக்கிய  முன்னெடுப்புகள் இதில்  அடங்கும் என்றார். இந்த முயற்சி சுலபமானது ஒன்றல்ல மேலும் காலம் பிடிக்கும். இருப்பினும்
குறைந்த பட்சம்  இனம் மற்றும் மதம் கடந்த அரசியல் முன்னுதாரணத்தை
அறிமுகம் படுத்த டாருல் எஹ்சான் கல்விக் கழகம் முயற்சிகளை
முன்னெடுத்துள்ளது.  எனவே மக்கள் அனைவரும் சமாதானமாகவும், இணக்கமாகவும் வாழ முடியும் என்றார் டத்தோ சைஃபுதீன்.

முன்னதாக, இன்று, டாருல் எஹ்சான் கல்விக் கழக ஆடிட்டோரியத்தில் நடந்த “பல்லின மக்கள் அரசியல் சிந்தனை மற்றும் மிதவாதம்” வட்டமேசை அமர்வில் (SMB) மதிப்பீட்டாளராகச்  செயல்பட்டார்.
வட்ட மேசைஅமர்வில்,நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து
கல்விமான்கள் கலந்து கொண்டனர், டாக்டர் ஜோஹன் சரவணமுத்து மற்றும் பினாங்கு கல்வி கழகத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி டத்துக் டாக்டர் ஓய்ய் கீ பெங் முதன்மை உரை  ஆற்றினர்.

செர்டாங் பாராளுமன்ற உறுப்பினரான  ஒங் கியான் மிங்,  பாரிட் புண்டார் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் முஜஹித் ரவா மற்றும் ஐடிஇ வாரிய
இயக்குனர் , பேராசிரியர் டாக்டர் ஷாஹருதீன் படருடின்  ஆகியோர்
இவ்வமர்வில்  உடன் கலந்து கொண்டனர்.

#சரவணன்


Pengarang :