SELANGORUncategorized @ta

மந்திரி பெசார்: இந்திய தொழில் முனைவர்களின் அடைவுநிலையில் பெருமிதம்

ஷா ஆலாம்,அக் 30:

சிலாங்கூர் மாநில இந்திய தொழில் முனைவர்கள் எட்டியுள்ள அடைவு நிலை பெருமிதம் கொள்ளும் அளவில் இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இம்மாநில இந்திய தொழில் முனைவர்கள் காட்டிடும் ஆர்வமானது பிரமிக்க செய்வதாகவும் கூறிய அவர்
இந்திய தொழில் முனைவர்களை உருவாக்கவும் தொழில் முனைவர்கள் அடுத்த நிலையினை எட்டுவதற்கும் 2017 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டில் 1 மில்லியன் ஒதுக்கப்பட்டது என்றார்.

அதேவேளையில்,இத்திட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒவ்வொரு திட்டவரைவுகளும் நிறைவாக இருப்பதோடு அதன் இலக்கையும் எட்டி வருகிறது.இந்நிலையில் வரும் நவம்பர் 3ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மாநில பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் எனவும் அவர் கோடிக்காட்டினார்.

இருப்பினும்,அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் அஃது 1 மில்லியனாக நிலைக்குமா அல்லது 2 மில்லியனாக உயருமா என்பதை வரும் வெள்ளிக்கிழமைகளில் ழமை வரை காத்திருந்து அறிந்துக் கொள்ளுங்கள் என எதிர்பார்ப்பினையும் தூண்டினார் மந்திரி பெசார். நான் சொல்வதை தான் செய்வேன் என கூறிய மந்திரி பெசார் மாநில பட்ஜெட்டில் இந்திய தொழில் முனைவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திரிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,ஹிஜ்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் அனைத்து இன தொழில் முனைவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் சிலாங்கூர் அரசாங்கம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 45,000 சிறுத்தொழில்வியபாரிகளுக்கு வெ.300 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் வட்டி இல்லா ஹிஜ்ரா கடன் உதவிநிதியை பெற்ற்வர்களில் 65 விழுகாட்டினர் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.ஒவ்வொருவரும் தங்களின் வியபார அபிவிருத்திக்கு வெ.1000 முதல் வெ.50,000 வரை கடனுதவி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இந்திய தொழில் முனைவர்களுக்கு தேவையான பயிற்ச்சிகள் வழங்குதல் அவசியம் என்பதை நினைவுறுத்திய அஸ்மின் அலி இவ்விடயத்தில் இணையம் வாயிலாக தொழில் செய்பவர்களையும் ஒதுக்கிட முடியாது என்றார். இதற்கிடையில், சிலாங்கூர் மாநிலத்தில் வறுமை நிலை கடந்த 2015இல் 0.2 ஆக இருந்த நிலையில் அஃது 2016இல் 0 விழுகாட்டினை எட்டியதாகவும் பெதுமிதமாக கூறினார்.

மேலும்,தங்களின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதில் சிலாங்கூர் மாநில இந்தியர்கள் 10.7 விழுகாட்டினை எடியுள்ள சூழலில் பூமிபுத்ராக்கள் 8 விழுகாடும் சீனர்கள் 7.3 விழுகாடும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.இந்திய சமுதாயம் சிலாங்கூரில் மாநில அரசாங்கத்தின் செயல் திட்டங்களால் தொடர்ந்து சிறந்த இலக்கிற்கு முன்னேறிக் கொண்டிருப்பது பெருமிதம் அளிப்பதோடு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்கள் நலன் கொண்ட அரசாங்கம் என்பதை மெய்பிக்க இஃது பெரும் சான்றாகவும் விளங்குவதாகவும் கூறினார்.

#ரௌத்திரன்


Pengarang :