PBTSELANGOR

மறுசுழற்சி போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தைத் தருகிறது

ஷா ஆலம்,அக்டோபர் 14:

மறுசுழற்சி போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தைத் தருகிறது.  மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் மறுசுழற்சி சிந்தனைகளைகள்
நடைமுறைப்படுத்தும் போது  இது வெற்றியடைகிறது என்றார்
ஷா ஆலம் மேயர் டத்தோ  அஹ்மத் ஜஹரின் மொஹெத் சாத். 11 ஆவது முறையாக நடத்தப்படும் இப்போட்டி மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பதன் மூலம்,  போட்டியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக மேயர் கூறினார்.

“2030 ஆம் ஆண்டுக்குள் ஷா ஆலம் ஒரு கார்பன்குறைந்த-நகரத்தை உருவாக்கும் இலக்கை நகராண்மைக் கொண்டிருப்பதாகவும், இதன்
தொடர்பாக  பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருவதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு  சேகரிக்கப்பட்ட  121,321.2 கிலோகிராம் மறுசுழற்சி செய்யும் பொருள்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு  143,946.2 கிலோகிராம் மறுசுழற்சி
பொருட்களை மாணவர்கள்  சேகரித்து உள்ளனர். இப்போட்டியில்
பங்கேற்றவர்களுக்குப்  பாராட்டுகளைத் தெரிவித்தார் மேயர்.

2006 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும்  பள்ளி-நிலை மறுசுழற்சி போட்டி 2017,F & N Beverages Marketing உடன்  இணைந்து நடத்திய ஷா ஆலம் மாநகர கவுன்சிலின் (MBSA)  முன்முயற்சியாகும். நடத்தப்பட்டு வரும் போட்டிகள் மாணவர்களுக்கும், பள்ளி சார்ந்தவர்களுக்கும்  நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் போட்டியின் இருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக  SMK
பிரிவு 18 ஷா ஆலம் பள்ளியைச் சேர்ந்த  கல்விசார் நடவடிக்கை  மூத்த
உதவியாளர்  ஹபிஸா அப்துல் சமாத் கூறினார்


Pengarang :