NATIONAL

மலேசியாவை ஆசியா நாடுகள் பின்னுக்குத் தள்ளிவிடும் அபாய நிலை

ஷா ஆலம், அக்டோபர் 5:

மற்ற ஆசியா நாடுகளை ஒப்பிடுகையில் மலேசியா பின்னுக்குத் தள்ளப்படும் அபாய
நிலையை எதிர்நோக்கலாம் என்று சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின்
அபிவிருத்திக்கான அறக்கட்டளையின் டீன் (UNISEL) டாக்டர் ஹம்டன் டத்தோ சலீஹ்தெரிவித்தார்.

இதற்கு முக்கியக் காரணம் மலேசிய இன்னும்தொழிலார்களை மையப்படுத்தும்  2.0
தொழித்துறையைக் கடைபிடித்து வருகிறது.  தற்போதுள்ள தொழில் துறையில் முழுமையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தமது கொள்கைகளில்
தோல்வி கண்டுள்ளது. மனித வளத் தேவைகளுக்கு மட்டும் கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் கொள்கைகள்   4.0 தொழில்புரட்சி சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டால் அந்நிய முதலீடுகள் வேறு
நாடுகளுக்குச் சென்றுவிடும். இதனால் மலேசியா  பிற ஆசிய நாடுகளால் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயத்தை எத்ரிநோக்கக்கூடும் என்று சாலே எச்சரித்தார்.

மத்திய அளவில்,  தெளிவான கொள்கையும் அமலாக்கமும் இதுவரையிலும் கிடையாது.பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்விக்கு
(TVET) மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர்
கினியிடம் தெரிவித்தார்.

தொழில் துறைக்கும் முழுமையான,தரமான  மனித வளத்திற்கும்  இடையே சமன்
நிலையை ஏற்படுத்துவதை நாம் சிந்திக்க வேண்டும் காரணம்  கொண்டுவரப்படும் கொள்கைகள் வெறுமனே தொழித்துறையின் மேம்பாட்டுக்கு மட்டுமே
இருந்துவிடாமலும், அணைத்து கோணங்களிலும் நிலையான  மனித உருவாக்கத்தின் முக்கியத்துவத்தைப் புறந்தள்ளாமலும் இருப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களின் நிறுவனங்கள், 4.0  தொழில் நுட்பப்
புரட்சிக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்காக  தங்கள் பாடத்திட்ட கட்டமைப்பில்  உடனடியாக மாற்றம் கொண்டு வர  வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#சரவணன்


Pengarang :