SELANGOR

மாநில இளைஞர் விளையாட்டு மற்றும் பண்பாடு ஆட்சிக்குழு உறுப்பினரின் வாழ்த்துச் செய்தி

 

தீயதை அகற்றி நல்லதை மீட்போம்.
தீபாவளி திருநாள் இந்துக்களின் முதன்மை பண்டிகையாக இருந்தாலும் அஃது மலேசியா போன்ற பல்லினம் வாழும் நாட்டில் ஒரு நாட்டின் கொண்டாட்டங்களின் ஒன்றாக திகழ்கிறது.இந்த தீபத்திருநாளில் தீயதை ஒழித்து நல்லதை மீட்க வேண்டும்.தீபாவளி மலேசியாவில் மட்டுமின்றி உலக நிலையில் சுமார் 1 பில்லியன் இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் என்பது பெருமிதமானது.

இருள் நீக்கி இன்பம் பொங்கிடும் தீபாவளியில் நாம் அனைவரும் மனம் சோர்ந்து விடாமல் விடாமுயற்சியால் வெற்றியினை எட்ட வேண்டும். இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மலேசியர்களும் இந்த தீபத்திருநாளில் நலம் பெற்று சகல இன்பங்களுடன் உயிர்ப்பிக்க வேண்டும்.தீபாவளியை இந்துக்கள் பெருநாளாக எண்ணாமல் மதம்,இனம்,நிறம் கடந்து நாம் அனைவரும் மலேசியர்களாக கொண்டாட வேண்டும்.

இந்நிலையில்,சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களுக்காக தொடர்ந்து மேற்கொண்டு வரும் பரிவு மிக்க திட்டங்கள் ஒரு இனத்தை சார்ந்து இல்லாமல் சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டதாக இருக்கிறது.மாநில அரசாங்கத்தின் இத்திட்டத்தின் இந்துக்களும் இந்தியர்களும் ஒருபோது விடுப்படவில்லை.

தகுதியானவர்களுக்கு அத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து நன்மைகள் வந்தடைந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்துக்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ள சிந்தனை மாற்றமானது மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கும் நிலையில் அந்த சிந்தனை மாற்றம் அரசியல் ரீதியில் புதியதொரு மாற்றத்திற்கு வித்திட்ட இந்த தீபாவளியில் இருள் நீங்கி ஒளியூட்ட வேண்டும் என்றும் எனது இனிய தீபாவளி வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அமிருடின் பின் ஷஹாரி பத்துகேவ் சட்டமன்ற உறுப்பினர்,
மாநில இளைஞர் விளையாட்டு மற்றும் பண்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர்


Pengarang :