SELANGOR

ரிம 6.5 பில்லியன் முதலீட்டு இலக்கை சிலாங்கூர் கடந்து செல்லும்

கோலாலம்பூர், அக்டோபர் 14:
2017ஆம் ஆண்டிற்கான முதலீட்டு இலக்கை சிலாங்கூர் மாநிலம் கடந்து
செல்லும். தற்போது RM6.5 பில்லியன் முதலீட்டு இலக்காக நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிலாங்கூர்  இந்த இலக்கைத் தாண்டச்
செல்லும் என்று முதலீட்டு,வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

2016-இல், சிலாங்கூர் மாநிலம்  RM6 பில்லியன் முதலீடு இலக்கைத்  தாண்டி RM7.88 பில்லியன் வரைச் சென்றது. இவாண்டில் மொத்த முதலீட்டிலிருந்து மாநிலம் ஜோகூர் மாநிலத்தைவிட  ஒரு படி முன் நின்றது. அனுமதிக்கப்பட்ட
மொத்தக்க திட்டங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சிலகூர் மாநிலம் 242 திட்டங்களைக் கையில் வைத்துக் கொண்டு முதல் நிலையில் உள்ளது.ஜோகூர்
மாநிலத்தில் 165 திட்டங்கள் அனுமதி பெற்றுள்ளன. 2016 வரையிலான
செய்யப்பட்ட  முதலீடு பதிவில்  ,  சிலாங்கூரில் 4,713 உற்பத்தி
திட்டங்கள் மூலம்  RM136 பில்லியன் முதலீட்டு மதிப்பு
அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

RM70.3 பில்லியன் தொகை உள்ளூர் முதலீடு ஆகும், மீதமுள்ள RM65.7 பில்லியன் வெளிநாட்டு முதலீடு ஆகும். சிறப்பான  முதலீடு முன்னேற்றம் காரணமாக
ஜோகூருக்குப் பிறகு சிலாங்கூரில் இரண்டாவது இடத்தில்இருக்கிறது. ஜோகூர் மாநிலத்தின் முதலீடு RM166 பில்லியன் ஆகும். இவ்வரிசையில் சரவாக் RM101 பில்லியன், பினாங்குRM88.6 பில்லியன்  மற்றும் கெடா RM58 பில்லியன் மதிப்புள்ள  முதலீடுகளைப்  பெற்றுள்ளன.


Pengarang :