RENCANA PILIHANSELANGOR

2018 வரவு செலவு: இளம் தலைமுறையின் பொருளாதார வளர்ச்சி கவனம் செலுத்தப்படும்

ஷா ஆலம், அக்டோபர் 3:

சிலாங்கூர் மாநிலத்தின் 2018 வரவு செலவு திட்டத்தில் இளம் தலைமுறை
பொருளாதாரத்  தர  முன்னேற்றம் கவனப்படுத்தப்படும் என்று இளைய தலைமுறையின் இளைஞர், விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் தொழில் மேம்பாட்டு ஆட்சி குழு
உறுப்பினர்  அமீர்டின் ஷரி தெரிவித்தார். போட்டித் திறன்   கொண்ட மற்றும்  மனித வளச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப
தன்னைத்  தயார் படுத்திக் கொள்ளக் கூடிய இளைஞர்களை உருவாக்க இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் வைப்பது மிக முக்கியம் என்றார் அமீர். இக்கவனக்குவிப்பு மாநிலத்தின் வளர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்துக்கு
ஏற்புடையதாக இருப்பதை உறுதிப்படுத்துவதாகும் என்றார் அவர்.

இப்புதிய முயற்சிகள்  நடைமுறைப்படுத்தப்பட்டால், இளைய தலைமுறை நீண்ட கால நலன்களைப் பெறுவர் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்தப்  புதிய முன்முயற்சியை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டாலெனில் ,
இன்றையமனித வளத் தேவையைச்  சந்திக்க, இளைய தலைமுறையினரின் சமூக
வளர்ச்சியை உயரும் வகை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்
அமீர்.

முன்னதாக, இளைஞர் மேம்பாட்டுக் கொள்கையில் தொழில் முனைவோர் மற்றும் வேலை, தலைமைத்துவம்  மற்றும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அமைப்பு
சம்பந்தப்பட்ட 10 முக்கிய அம்சங்கள்  உள்ளடங்கியுள்ளன.

இது மேலும் சமூக அம்சங்கள், தன்னார்வ இணைப்பு, கலாச்சாரம் மற்றும் கலைகள், நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, மற்றும் மத நம்பிக்கை ஆகியவைகள் உள்ளடங்கியது.

அந்தத் தேவைகளை நடப்புக்குக் கொண்டுவரும் முயற்சிகளை
உள்ளூர் இளைஞர் இயக்கிகளை உருவாக்குவதன் மூலம் அடையலாம். இதன் மூலம் போட்டித்திறன் கொண்ட தலைமைத்துவத்தை உருவாக்கி,  சிலாங்கூர் இளைஞர் சமூகத்தின் மாற்றத்திற்கு அவர்களைக் கடத்தியாகப் பயன்படுத்தலாம்
என்கிறார் அமிருடின்.

#சரவணன்


Pengarang :