SELANGOR

இந்திய தொழில் முனைவர்களுக்கு 30 லட்சம்

ஷா ஆலம், நவம்பர் 13:

கடந்த 2017ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய தொழில் முனைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களை தொழில் ரீதியில் அடுத்தக்கட்டத்திற்கு சரியான இலக்கினை நோக்கி கொண்டு செல்லவும் இந்திய தொழில் முனைவர்களுக்கு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கிய வேளையில் வரும் 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அஃது 30 லட்சமாக உயர்வு கண்டிருப்பது இந்திய தொழில் முனைவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகும்.

2017ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முதன் முறையாக இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் சிலாங்கூர் வாழ் இந்திய தொழில் முனைவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பினை பெற்றதோடு அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் சரியான இலக்கிற்கு நகர்வதை கண்டு மாநில அரசாங்கம் பெருமிதம் கொண்டதாகவும் மாநில அரசாங்கத்தின் இலக்கும் வெற்றியடைந்திருப்பதாகவும் கூறிய மாநில மந்திரி பெசார் இத்திட்டம் மேலும் சிறந்த நிலையில் அதன் பங்களிப்பினை வழங்கிட வேண்டியே 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீட்டை வெ.30 லட்சமாக உயர்த்துவதாகவும் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் இந்திய தொழில் முனைவர்களின் வாழ்வாதாரத்தில் தனித்துவ கவனம் செலுத்தி வருவதாகவும் அவர்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் மாநில அரசாங்கம் பெரும் அக்கறைக் கொண்டிருப்பதாகவும் அஸ்மின் அலி கூறினார்.இத்திட்டத்தின் கீழ் தொழில் செய்பவர்களோடு டிஜிட்டல் சந்தை,கிராபிக் டிசைன்,மின் – வர்த்தகம்,தையல் கலை,பூ வடிமைப்பு,கேக் செய்தல் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த பயிற்சிகளை வழங்கி இந்திய இளைஞர்களை தொழில் முனைவர்களாக உருவாக்குவதும் மாநில அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

தொழில் செய்து வருபர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு காண்பதோடு தொழில் செய்ய ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பயிற்சியினை வழங்கி அவர்களையும் வர்த்தகத்தில் முன்னேற வைப்பதே சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விவேகமான சிந்தனை என்றும் மந்திரி பெசார் கூறினார்.இந்த திட்டத்தின் கீழ் கடந்தக்காலங்களை போல 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டின் ஒதுக்கீட்டிலும் அதிகமான இந்திய தொழில் முனைவர்கள் சிறந்த நிலைக்கு முன்னேற வேண்டும் என்றும் இன்னும் அதிகமான தொழில் முனைவர்கள் இந்திய சமுதாயத்தின் மத்தியில் உருவாக வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நம்பிக்கையோடு கேட்டுக் கொண்டார்.

#வீரத் தமிழன்


Pengarang :