PBTUncategorized @ta

எம்டிகெஎல் & எம்டிஎச்எஸ் ‘பந்தாஸ்’ குழுவினர் அடுக்குமாடி மீது சாய்ந்த ராட்ஷத மரங்களை துப்புரவு செய்தது

பினாங்கு, நவம்பர் 7:

கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) ஆகிய ஊராட்சி மன்றங்களின் ‘பந்தாஸ்’ குழுவினர் கனத்த மழையால் மாக் மன்டின் அடுக்குமாடி குடியிருப்பில் மீது சாய்ந்த ராட்சத மரங்களை வெட்டி அகற்றினர். காலை மணி எட்டுக்கு தொடங்கிய துப்புரவு பணிகள் 17 பணியாளர்களைக் கொண்டு நான்கு மணி நேரத்தில் முடிவுற்றது. இதில் செபராங் பிராய் நகராண்மை கழகத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

எம்டிகெஎல் ‘பந்தாஸ்’ குழுவின் தலைவர் மிஸ்கோன் கரீம் கூறுகையில், மாக் மன்டின் பகுதியில் நேற்றிரவு தொடங்கி பணிபுரிந்து வந்ததாக குறிப்பிட்டார்.

”  இன்று, எம்டிஎச்எஸ் மற்றும் எம்பிஎஸ்பி ஆகியவற்றின் ஒத்துழைப்போடு ஆறு இயந்திரங்களை பயன்படுத்தி பணியில் ஈடுபட இருக்கிறோம். நேற்று சபாக் பெர்னாம் மாவட்ட மன்றத்தின் ஒத்துழைப்போடு 14 பணியாளர்களுடன் எட்டு மரங்களை வெட்டி அகற்றினோம்,” என்று விவரித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :