SELANGORUncategorized @ta

எம்டிகெஎல்: சட்ட விரோதமாக குப்பைகளை வீசுவோருக்கு ரிம 1,000 அபராதம் !!!

கோலா லங்காட், நவம்பர் 16:

கோலா லங்காட் மாவட்ட மன்றத்தின் (எம்டிகெஎல்) கீழ் வசிக்கும் பொது மக்கள் குப்பைகளை கண்ட இடத்தில் வீச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் சுத்தத்தை பேணிக் காக்க வேண்டும் என்று எம்டிகெஎல் அகப்பக்கத்தில் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குப்பை வீசப் படுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக ரிம 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

 

 

 

 

 

 

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனியார் நில உரிமையாளர் அல்லது அரசாங்க நிலத்தில் சட்ட விரோதமாக குப்பைகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மாநில அரசாங்கம் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிர்வாகத்தில் மூலம் இப்பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :