SUKANKINI

சர்வதேச கால்பந்து போட்டியில், ஷா ஆலாம் இளையோர் குழு வென்றது

சிங்கப்பூர், நவம்பர் 10:

சிங்கப்பூரில் நடைபெற்ற 16வயதுக்குட்பட்ட சர்வதேச கால்பந்து போட்டியில் மலேசியாவின் ஷா ஆலாம் இளையோர் கால்பந்து குழு வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையில் நடைபெற்ற சர்வதேச சிங்கா கிண்ணத்தில் மலேசியாவிலிருந்து 3 குழுக்கள் கலந்துக் கொண்ட வேளையில் அதில் ஷா ஆலாம் இளையோர் கால்பந்து குழு வாகைசூடியது.

இந்திய கிராமத்து தலைவரான
திரு.குமரவேலுவை தலைமைப் பயிற்சியாளராக கொண்டிருக்கும் ஷா ஆலாம் இளையோர் கால்பந்து குழு மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மலேசியா, தாய்லாந்து,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா உட்பட பிலிப்பைன்ஸ் நாட்டு கால்பந்து குழுக்களை வென்று 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் சர்வதேச சிங்கா கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தனர்.


மொத்தம் 15 குழுக்கள் கலந்துக் கொண்ட இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஷா ஆலாம் இளையோர் கால்பந்து குழு பதக்கம்,வெற்றியாளர் கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை பெற்று மலேசியாவிற்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளையில்,இப்போட்டியில் பிரவனிஸ்வரன் நாதன் அதிக கோல்களை புகுத்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.அவர் இப்போட்டியில் 10 கோல்களை புகுத்து ஷா ஆலாம் இளையோர் கால்பந்து குழுவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.
இந்த போட்டிக்கான மொத்த செலவினத்தையும் அக்கிளாப்பின் தலைவர் திரு.கோபாலகிருஸ்ணன் ஏற்றுக்கொண்டார்.அதேவேளையில் பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் இக்குழுவை சர்வதேச போட்டியில் கலந்துக் கொள்ள வழி அனுப்பும் நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமிரூடினால் கலந்துக் கொள்ள இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற போட்டியில் மலேசியாவிலிருந்து 3 குழுக்களும், சிங்கப்பூரில் 5 குழுக்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 3 குழுக்களும், பிலிப்பைன்ஸ்யிலிருந்து 3 குழுக்களும், தாய்லாந்திலிருந்து 1 குழுவும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :