SELANGORUncategorized @ta

சிலாங்கூரின் 2018-இன் வரவு செலவு திட்டம் மத்திய அரசாங்கத்தை விட மிகச் சிறந்தது

ஷா ஆலம், நவம்பர் 4:

நேற்று மாலை சிலாங்கூர் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்தில் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன் அனைத்திலும் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை விட சிறந்த திட்டமாக அமைகிறது என்று மாநில முதலீடு, தொழிற்துறை, வாணிபம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். இந்த முறையும் வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிமுகப்படுத்தி உள்ளது பெருமை அளிக்கிறது என்றார்.

”  சிலாங்கூர் மாநில மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தி எதிர் காலத்தில் சீரான பொருளாதார மேம்பாடு அடைய தீட்டப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மக்கள் உணர வேண்டும்,” என்று சிலாங்கூர் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

 

 

சிலாங்கூரில் கடந்த 2015-இல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து திட்டத்திற்கு ரிம 30 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இது ரிம 20 மில்லியன் ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :