NATIONAL

சிலாங்கூர் இந்திய கிராமத்து தலைவர்கள் பினாங்கில் களம் இறங்கினர்

ஷா ஆலம், நவம்பர் 14:

சிலாங்கூர் இந்திய கிராமத்து தலைவர்கள் டோக் கிராமம், புக்கிட் தெங்கா, பினாங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருள் உதவிகள் வழங்கினார்கள். சுமார் 60 குடும்பங்களுக்கு இந்திய கிராமத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ராஜேந்திரன் ராசப்பன் தலைமையில் வழங்கப்பட்டதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு கிரிஸ் லூய்ஸ் தெரிவித்தார்.

கடந்த வாரம் ஏற்பட்ட மிக மோசமாக வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கிராமத்து மக்களின் சிரமங்களை புரிந்து கொண்டு அடிப்படை பொருட்களை வழங்கியது கிராமத்து தலைவர்களின் சிறந்த சேவையை சிலாங்கூரில் மட்டுமில்லாமல் மலேசியாவில் எங்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் களம் இறங்கும் செயலை அனைவரும் பாராட்டினார்கள்.

 

ராஜேந்திரன் மற்றும் கிரீஸ் ஆகியவர்களோடு திருமதி கண்மணி, திருமதி மாரியம்மா பழனி, திரு ராதாகிருஷ்ணன், திரு மணிவண்ணன், திரு சுந்தரம் மற்றும் ஸ்ரீநிவாசன் முனுசாமி போன்ற இந்திய கிராமத்து தலைவர்கள் நேரிடையாக களத்தில் இறங்கி நிலமையை கண்டறிந்து உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்

 


Pengarang :