SELANGOR

சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் வருடாந்திர புட்சால் கிண்ணம் 2017

ஷா ஆலம், நவம்பர் 29:

எதிர் வருகின்ற 3.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 8 முதல் மாலை மணி 6 வரை 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்து விளையாட்டுப்போட்டி மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்களின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்த வருடாந்திர கால்பந்து விளையாட்டுப்போட்டியில் (புட்சால்) சிலாங்கூர் மாநில சட்டமன்ற தொகுதியிலிருந்து மொத்தம் 32 குழுக்கள் இப்போட்டியில் களம் காணவிருக்கின்றனர் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு கிறிஸ்டி லுயிஸ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில அளவில் நடைப்பெறவிருக்கும் இந்த கால்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற 8 குழுக்களுக்கு ரொக்க பணமும் பதக்கங்களும் வழங்கப்படும் அதே வேளையில், அதிக கோல் அடித்தவர், சிறந்த கோல்கீப்பர், சிறந்த விளையாட்டாளர், சிறந்த விளையாட்டு நாயகன் என்று பல திறமைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று இப்போட்டியின் ஒருங்கினைப்பாளர் திரு குமரவேல் கூறினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் மற்றும் மாண்புமிகு அமிருடின் அவர்களும் இந்த சுபாங் கிராண்ட் விளையாட்டு மைதானத்தில் (Sports Planet Subang Grand) நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் கால்பந்து விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இலவச விளையாட்டுப் போட்டியின் நோக்கம், இந்திய இளைஞர்கள் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் திறமையாகவும் திகழ வேண்டும் என்பது மட்டுமல்லாது மீண்டும் இந்திய கால்பந்து வீர்ர்களை உருவாக்க இது ஒரு தளமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது என்று சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர் என்று திரு இராசேந்திரன் இராசப்பன் அவர்கள் கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :