SELANGOR

சிலாங்கூர் மாநில நிதிநிலை சிறப்பாகவே உள்ளது என அஸ்மின் சூளுரைத்தார்

ஷா ஆலம், நவம்பர் 10:

சிலாங்கூர் மாநிலத்தின் நிதிநிலை மிகவும் சிறப்பாகவும் வலுவாகவும் இருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கோடிக்காட்டினார்.கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அதன் நிதிநிலை வெ.178.22 மில்லியனுக்கு வலுவான நிலையில் இருந்ததையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

திறன்மிக்க செயல்பாடு மற்றும் நிர்வாகத்திறனால் தொடர்ந்து நிதிநிலை வலுவாக இருப்பதோடு மாநில இருப்பும் தொடர்ந்து அதிகரித்தும் வருவதாக கூறிய அவர் கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி மாநிலத்தின் மொத்த இருப்பு 3.05 பில்லியனாக இருந்த வேளையில் அஃது தற்போது 3.24 பில்லியனாக உயர்ந்திருப்பதையும் பெருமிதமாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,மாநில அரசாங்கத்தின் வருவாய் மேற்கோள் வெ.2.49 பில்லியனை எட்டியுள்ள நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டில் வரி வசூல் மூலம் வெ.594,68 மில்லியனும் வரியில்லாமல் வருவாய் வசூல் வெ.1.72பில்லியனாகவும் மற்றும் வருவாய் மேற்கோள் இல்லாமல் கிடைக்கப் பெற்றவை வெ.184.53 மில்லியன் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

அவ்வகையில் 2017ஆம் ஆண்டில் மாநில வருவாய் மேற்கோள் 2.50 பில்லியனாக உயர்ந்துள்ள நிலையில் வரி வசூல் மூலம் வெ.625.77 மில்லியனும் வரியில்லா வருவாய் வெ.1.67 பில்லியன் மற்றும் இதர வாயிலான வருவாய் மூலம் வெ.206.63 மில்லியனும் கிடைக்கப் பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக 2018ஆம் ஆண்டுகான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் வெ.312 பில்லியன் மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் பங்காற்றும் அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் நலன் மி.க்க சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :