SELANGOR

தெராத்தாய் சட்ட மன்ற தீபாவளி கொண்டாட்டம், வட்டார பொது மக்கள் குதூகலம்

தெராத்தாய், நவம்பர் 14:

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தெராத்தாய் சட்ட மன்ற உறுப்பினரின் தீபாவளி திறந்த இல்ல விருந்துபசரிப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்திய பாரம்பரிய உடையில் வந்த தெராத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் தியோ வாய் கேங் அனைத்து விருந்தினர்களையும் இன்முகத்துடன் வரவேற்றார் என்று தெராத்தாய் சட்ட மன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி திருமதி என்.எஸ் விமலா தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ், ஜசெக தலைவர் டான் கொக் வாய், பெட்டாலிங் உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் தோனி புவா, அம்பாங் ஜெயா நகராண்மை கழக உறுப்பினர் சுப்பிரமணி, சிலாங்கூர் இந்திய கிராமத்து தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ராஜேந்திரன் ராசப்பன் மற்றும் பொது இயக்கத்தின் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தாமான் மாவார் வீடமைப்பு பகுதியில் ஏற்பாடு செய்த விருந்துபசரிப்பில் கண்கவர்  கலைநிகழ்ச்சி மக்களை வெகுவாக கவர்ந்தது என்று விமலா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கப் பட்டது என்றார். நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய தெராத்தாய் சட்ட மன்ற உறுப்பினர் வேய் கேங், மலேசிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஜிஎஸ்டி வரியினால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்று பலத்த கரவொலி இடையே தெரிவித்தார். மேலும் 1எம்டிபி சம்பந்தமான குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் புத்ரா ஜெயாவில் இருந்து நீக்கப் பட வேண்டும் என்று சூளுரைத்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :