SELANGORUncategorized @ta

தொழிற்சாலைகள் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடமாக இருப்பதை எம்பிகே கண்காணிக்கும்

கிள்ளான், நவம்பர் 1:

கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே), அனுமதியின்றி  அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களாக மாற்றப்படுவதை கண்காணிக்கும் என்று அதன் தலைவர் டத்தோ யாஸிட் பிடின் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, பாதுகாப்பு மற்றும் சுத்தமான சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமல் படுத்தி வருவதை உறுதி செய்யவே என்றார்.

மேலும் கூறுகையில், தமது அமலாக்க பிரிவினர் இண்டா போய்ண்ட், சுங்கை சண்டோங் 9 சாலை, சுங்கை பினாங் சாலை, பூலாவ் இண்டா,வட கிள்ளானில் பெலாபுரான் சாலை, கிள்ளான் சென்றல் மற்றும் அமான் பெர்டானா போன்ற இடங்களில்  நடவடிக்கைகளை முடுக்கிவிடப்பட்டு இருப்பதாக கூறினார்.

”  இந்த திட்டத்தில் மூலம், கட்டிட இலாகா முதலாளிகளுக்கு அல்லது கட்டிட உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பும். விளக்கக் கூட்டத்தில், தங்கும் தளமாக மாற்ற வழிமுறைகள் குறித்து முழு விபரங்களை எம்பிகே கொடுக்கும்,” என்று விவரித்தார்.

 

“#வீீீீரத் தமிழன்


Pengarang :