SELANGOR

பிஎன்எச்பி சம்மனை ரத்து செய்யக் கோரி சிலாங்கூர் விண்ணப்பம்

ஷா ஆலம், நவம்பர் 28:

புன்சாக் நியாகா ஹோல்டிங்ஸ் நிறுவனம் (பிஎன்எச்பி) தொடுத்த ரிம 14 பில்லியன் இழப்பீடு வழக்கை ரத்து செய்யக்கோரி சிலாங்கூர் மாநில அரசாங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நடவடிக்கை எடுக்க காரணம் பிஎன்எச்பிக்கு வழக்கு தொடுக்க எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்றும் தீய எண்ணத்தில் அந்நிறுவனம் செயல்பட்டதே ஆகும் என்று விவரித்தார்.

மாநில அரசாங்கம், மக்களின் நலனுக்காகவும் மற்றும் மாநிலத்தின் நன்மைக்காகவும் ரத்து செய்ய முயற்சி செய்வதாக அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் ‘ஸ்மார்ட் டேசா’ திட்டத்தை ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Pengarang :