NATIONAL

பினாங்கிற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம10 லட்சம் உதவி

பினாங்கு, நவம்பர் 10:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநில மக்களுக்கு உதவிடும் நோக்கத்தோடு சிலாங்கூர் மாநில அரசாங்கம் வெள்ள நிவாரண உதவியாக வெ.10 லட்சத்தை அறிவித்ததோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தன்னார்வலர்களையும் அரசு அனுப்பியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்த சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் ஊராட்சி மன்றங்களை சார்ந்தவர்களோடு தன்னார்வலர்களும் பினாங்கு மக்களுக்கு உதவிட கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் சிலாங்கூர் அரசு சார்பு நிறுவனங்கள் ரிம 430,000 உதவி நிதியாக வழங்கியுள்ளது என கூறினார்.

தனது அனைத்து அலுவல்களையும் தற்காலிகமாக ஒத்தி வைத்து விட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் காண சிலாங்கூர் மந்திரி பெசார் சென்ற வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்திற்கு இம்மாதிரியான சூழலில் நாம் உதவுவதுதான் விவேகம் என்றும் அவர் கூறினார்.இம்மாதிரியான இக்கட்டான சூழலில் உதவுவதுதான் நாம் அனைவரும் மலேசியர்கள் எனும் உன்னத உணர்வினை மேலோங்க செய்வதாகவும் கூறினார்.

தற்போதைய சூழலில் வெள்ளம் வடிந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறிய டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பினாங்கு மாநிலம் இந்த வெள்ளப் பிரச்னையிலிருந்து முழுமையாக விடுப்பட்டு வழக்க நிலைக்கு திரும்ப வேண்டும்.மக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே தற்போதைய பிராத்தனை என்றும் மந்திரி பெசார் கூறினார்.
இதற்கு முன்னதாக டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியை வரவேற்ற பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வெள்ளம் தொடர்பிலான விளக்கத்தையும் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித நடவடிக்கைகள் குறித்தும் மாநில செயலகம் அமைந்திருக்கும் கொம்டார் கட்டடத்தில் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நிலவரத்தை கேட்டறிந்த சிலாங்கூர் மந்திரி பெசார் பினாங்கு மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் எல்லா நிலையிலான உதவிகளையும் அதேவேளையில் ஒத்துழைப்பினையும் வழங்கிட சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.மேலும்,சிலாங்கூர் மாநிலத்தை சார்ந்த தன்னார்வலர்களும் பினாங்கு மாநிலத்தில் மையமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட களமிறங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில்,வெள்ளம் ஏற்பட்டு 48 மணிநேரத்தில் அதனை எதிர்க்கொள்ளவும் அதிலிருந்து மக்களை பாதுகாக்கவும் பினாங்கு முதலமைச்சர் காட்டிய அக்கரையும் அவரது ஈடுப்படும் பெருமிதமாக இருந்ததாகவும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசர் கூறினார். இதற்கிடையில்,சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதன் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியும் காட்டிய பரிவுமிக்க ஆதரவும் ஒத்துழைப்பும் பினாங்கு மக்களை நெகிழ செய்து விட்டதாகவும் அவர்களின் ஒத்துழைப்பிற்கும் உதவிகளுக்குக் நன்றி கூறுவதாகவும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும், தனது சொந்த அலுவல்கள் அனைத்தையும் ஒத்தி வைத்து விட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்திற்கு வருகை அளித்து நேரில் நிலவரத்தை கண்டறிந்து உதவிகள் பலவற்றையும் முன்னெடுத்த டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு நன்றியும் அன்பையும் லிம் குவான் எங் பகிர்ந்துக் கொண்டார்.

#வீரத் தமிழன்


Pengarang :