NATIONAL

பினாங்கு மாநிலத்தை தொடர்ந்து பேராக்,கெடாவிலும் வெள்ளம்

பேராக், நவம்பர் 10:

தொடர் மழையினால் பினாங்கு மாநிலம் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான வேளையில் அதனை தொடர்ந்து தற்போது பேராக் மற்றும் கெடா மாநிலங்களில் சில பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேராக் மாநிலத்தில் பேராக் தெங்கா மற்றும் உலு பேராக் ஆகிய இரு மாவட்டங்களில் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அவற்றில் கம்போங் சும்பிதான், கோத்தா தம்பான்,பங்கோல் பாத்து,பங்கோல் பிலிம்பிங்,கம்போங் போஃர்,சாய்ஹின்,பெக்கான்,கேலோக் உட்பட சில பகுதிகளும் அடங்கும்.இவற்றில் சில இடங்களில் வெள்ளம் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேராக் மாநிலத்தை அடுத்து கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி,கோலா மூடா,மெர்பூக்,பாடாங் செராய் மற்றும் பாலிங் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி பேராக் மற்றும் கெடாவில் வெள்ளம் கட்டுப்பாட்டில் இருப்பதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளும் விவேகமாகவும் நன் முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி வெள்ள நிவார்ண மையங்கள் அமைக்கப்படிருப்பதோடு பாதுகாப்பு பணிகளையும் மாநில அரசும் அதுசார்ந்த இலாகாவும் நன் முறையில் மேற்கொண்டு வரும் நிலையில் தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஆங்காங்கே களமிறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில்,வெள்ளம் ஏற்படலாம் என கணிக்கப்படும் இடங்களையும் அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுத்தவும் படுகிறது.தற்போதைய நிலவரப்படி பாதுகாப்பு அம்சங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் செம்மையாகவும் நன் முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

#வீரத் தமிழன்


Pengarang :