SELANGOR

பெடுலி சிஹாட் திட்டத்திற்கு ரிம 200 அதிகரிப்பு

ஷா ஆலம், நவம்பர் 13:

நாட்டில் மருத்துவ செலவினங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருவதை கணக்கிட்டு டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சிலாங்கூர் வாழ் மக்களின் மருத்துவ செலவினத்தை குறைப்பதற்காகவே பரிவு மிக்க திட்டங்களில் ஒன்றாக பெடுலி சிஹாட் எனும் மருத்துவ் அட்டை திட்டத்தை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெடுலி சிஹாட் மருத்துவ அட்டை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அதில் பதிவு செய்து நன்மை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 23 விழுகாடாக தற்போது இருக்கும் பட்சத்தில் அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க ஒவ்வொரு சிலாங்கூர் வாழ் இந்தியர்களும் முயல வேண்டும்.அத்திட்டத்தில் பதிவு செய்ய முன் வர வேண்டும்.ஒவ்வொரு வட்டார இந்திய பிரதிநிதிகளும் இந்தியர்களை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு முன்னர் பெடுலி சிஹாட் மருத்துவ அட்டைக்கு மாநில அரசாங்கம் வெ.500ஐ ஒதுக்கீடு செய்த நிலையில் வரும் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெ.200ஐ அதிகரித்து அத்தொகையை வெ.700ஆக மாநில அரசு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மாநில அரசின் இந்த பரிவு மிக்க திட்டத்தில் இந்திய சமுதாயம் விடுப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அத்திட்டத்தில் நம்மவர்களின் பதிவுகள் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.

அதிகரித்து வரும் மருத்துவ செலவினத்தை குறைக்க மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரிவு மிக்க இத்திட்டத்தில் இந்தியர்கள் 23 விழுகாட்டிலிருந்து மேலும் கூடுதலான விழுகாட்டிற்கு உயர வேண்டும்.அதற்கு நம்மவர்களின் விவேகமான செயல்பாடும் முயற்சிகளும் அவசியம்.இத்திட்டம் இந்தியர்களுக்கு நன்மை பயக்கும் மாநில அரசாங்கத்தின் திட்டங்களில் தனித்துவமான ஒன்று என்றும் கூறலாம்.

#வீரத் தமிழன்


Pengarang :