NATIONAL

பெரா நாடாளுமன்றத்தில் ஆவி ராணுவ வாக்காளர்கள்?

பெரா, நவம்பர் 11:

பகாங் மாநில, பெரா நாடாளுமன்றத்தில் புதிய வாக்காளர்களாக இன்னும் கட்டப்படாத ராணுவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கெஅடிலான் கட்சியின் மத்திய உச்ச மன்ற உறுப்பினரான ஸக்காரியா ஹாமிட் நேற்று ஆதாரப்பூர்வமாக காட்டினார்.  மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திறக்கப்படாத மூன்று  ராணுவ முகாம்களில் சேர்க்கப்பட்ட ராணுவ வீரர்களின் பெயர்கள் தோடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு  லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் ஈசா அன்வார் கூறியிருந்தார்.

இந்த நடவடிக்கை மூலம் எஸ்பிஆர் மீது எதிர்மறையான தோற்றதத்தை ஏற்படுகிறது என்றார்.மிக அதிகமான ராணுவ வீரர்கள் பெரா ராணுவ முகாம், பாகான் டத்தோ ராணுவ முகாம் மற்றும் சிகாமாட் ராணுவ முகாம் போன்ற கட்டப்படாத முகாம்களில் வாக்காளர்களாக சேர்ப்பது தவறான நடவடிக்கை என்று ஸக்காரியா கூறினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.

#வீரத் தமிழன்


Pengarang :