SELANGORUncategorized @ta

மகளிர் மேம்பாட்டு மையம்: ஒதுக்கீடு அதிகரித்ததால் திட்டங்கள் பன்மடங்காகும்

ஷா ஆலம், நவம்பர் 16:

மகளிர் மேம்பாட்டு மையத்திற்கான (பிடபள்யுபி) 2018-இன் நிதி ஒதுக்கீடு ரிம 50,000 -ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இதன் வழி சிலாங்கூர் மாநிலத்தில் மகளிர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மேலும் அதிகரிக்கப் படும் என்று சிலாங்கூர் மாநில சமூக நல, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். 2017-இல் மகளிர் மேம்பாட்டு மையத்திற்கு ரிம 30,000 மட்டுமே ஒதுக்கப்பட்டது எனவும் இதன் மூலம் 12 திட்டங்களுக்கு உதவி செய்ய முடிந்தது என்று விவரித்தார்.

இதற்கு முன்பு, 2018-இன் வரவு செலவு திட்டத்தில் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மகளிர் மேம்பாட்டு மையத்தின் செயல்பாடுகளுக்கு ரிம 30,000-இல் இருந்து ரிம 50,000 -ஆக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :