SELANGOR

மந்திரி பெசார்: அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே முதல் இலக்கு

ஷா ஆலம், நவம்பர் 10:

அடிப்படை வசதிகளில் மறுமலர்ச்சியையும் சீர்த்திருத்தமும் ஏற்படுத்துவதே மாநில அரசாங்கத்தின் பெரும் இலக்காக இருக்கும் நிலையில் அதனை செம்மையாகவும் திறன் மிக்க நிலையிலும் அமல்படுத்தும் வகையிலும் சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றங்களின் செயல்பாடுகளுக்காக வெ.20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும் அவர்களின் எண்ணங்களின் வெளிபாடுகளுக்கு ஒப்பவும் பொழுதுபோக்கு பூங்காவினை சீரமைப்பதும் பசுமைவெளி திட்டங்களில் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்துவமும் மிகவும் அவசியமானதாகவும் இன்றைய அடிப்படை தேவையாகவும் விளங்குவதாகவும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் மக்கள் மேம்பாட்டில் மட்டும் தங்களின் தேவைகளை முன் வைப்பதில்லை. மாறாய்,பொழுதுபோக்கு பூங்கா,நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளின் பூங்கா ஆகியவற்றும் தங்கள் குடும்பங்களோடு வாழ்வியம் முறை மற்றும் சூழலையும் அடிப்படை தேவைகளில் சிறப்பினாக கருதுகிறார் என்றால் அஃது மறுப்பதற்கில்லை என்றார்.
அவ்வகையில்,மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களும் தத்தம் பகுதிகளில் உணவு அங்காடிகளை மேம்படுத்துதல்,பொது கழிப்பறைகளை மேம்படுத்துதல், பொது பசார் மேம்பாடு ஆகியவற்றை சீரமைத்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களையும் உருமாற்றங்களை ஏற்படுத்திடும் அதேவேளையில் சாலைகள்,வடிகால் மற்றும் பாலங்கள் ஆகியவற்றிலும் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களும் விவேகமாகவும் திறன் மிக்க ஆற்றலோடும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மந்திரி பெசார் ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களும் தாபூங் அமானாவில் கையிருப்பினை வைத்திருப்பது அவசியம் என்றும் அதன் மூலம் மக்களின் அடிப்படை வசதிகளை நன் நிலையில் நிறைவு செய்வதில் தனது தனித்துவ பங்கினை ஆற்றிடவும் வேண்டும் என தெளிவுப்படுத்தினார்.

#வீரத் தமிழன்


Pengarang :