NATIONALUncategorized @ta

மந்திரி பெசார் புத்ரா ஜெயாவில் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

ஷா ஆலம், நவம்பர் 24:

2018-இன் சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் மொத்த  ஒதுக்கீடான ரிம 3.12 பில்லியன் நேரிடையாக மக்களுக்கு நன்மைகள் சென்று அடைய பல்வேறு திட்டங்களை மாநில அரசாங்கம் தீட்டி உள்ளது என்று சிலாங்கூர் பல்கலைக் கழகத்தின் அடிப்படை மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் ஹாம்டான் டத்தோ ஷாலே கூறினார். இதை போன்று மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ரிம 200 பில்லியனுக்கு டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தாக்கல் செய்தால் மலேசிய மக்கள் அனைவரும் பலன் அடைவார்கள் என்றார்.

”   சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு மக்கள் திட்டங்களை மாநில அரசாங்கம் தீட்டி உள்ளது. ரிம 3 பில்லியனில் இவ்வளவு பெரிய அளவில் சாதனைகள் செய்யும் போது ரிம 200 பில்லியனில் மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி மக்களுக்கு நன்மைகள் சென்று அடைய முடியும். இது ஒரு எடுத்துக்காட்டு, தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் செயலாற்ற முடியும் என்று இது காட்டுகிறது. இது வெறும் வாய் ஜாலம் அல்ல, நிஜத்தில் பாக்காத்தான் சிறந்த ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

#வீரத் தமிழன்


Pengarang :