AppleMark
RENCANA PILIHAN

வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியில் ஆர்வம் காட்டுங்கள்

நாம் வாழும் வாழ்வில் நம்மால் இயன்ற தான தர்மங்களை இயலாதவர்க்கும் வேண்டுபவருக்கும் வழங்குதல் சிறப்பு என்பது சான்றோர் வாக்கு. பலவித தானங்கள் அறியப்பட்டு இருப்பினும் அன்னதானமும் கல்விதானமுமே மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. ஒருவனுக்கு எத்துனை அளவு பொன்னையும், பொருளையும் வாரி வாரி கொடுத்தாலும், மனித மனதில், இன்னும் கொஞ்சமிருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தான் மேலோங்கும். போதும் என்ற மனம் வருவது மிக மிக கடினம்.

ஆனால் உணவு வழங்கும்போது, ஒரு நிலையில் வயிறு நிறம்பும், அச்சமயம் யாராக இருப்பினும் போதுமென்று கூறுவர். இதுவே அன்னதானம் சிறந்தது என்பதற்கான முக்கிய கூற்று. இது முற்றிலும் உண்மையாக இருந்த போதிலும், உணவானதும் கூட குறிப்பிட்ட சில பொழுதுகள் தாண்டிய பின் செரிமானம் ஆகும். அதன் பின் மனிதனுக்கு மீண்டும் பசிக்கும். ஆக உணவு மட்டுமே வழங்கி கொண்டிருந்தாலும், ஒருவன் முழு சோம்பேறியாகி விவரீதமான காரியங்களை செய்ய துவங்கி விடுவான். ஆகையால் அன்னதானம் சிறந்தது என்றாலும் ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை தான் சிறந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் கல்வி தானம் என்பது முற்றிலும் வேறு ஒரு கோணம் உடையது. ஒரு மனிதன் பெற்றிருக்கும் செல்வங்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்து விடலாம் அல்லது எதாவது ஒரு சூழலில் பறிகொடுத்தும் விடலாம். ஆனால் அவனிடமுள்ள அறிவையோ ஞானத்தையோ மட்டும் எந்த சூழலிலும் யாரும் திருடவும் முடியாது, தாமாக இழக்கவும் முடியாது. அத்தனை புனிதமான அறிவை ஈட்டித் தரும் முதல் படி, அடிப்படைக் கல்வியிலிருத்தே ஆரம்பமாகிறது.

அதையே மகாகவி பாரதி, அன்னசத்திரம் கட்டுவதை விட ஆலையங்கள் எழுப்புவதை விட ஏழை ஒருவனுக்கு கல்வி அளிப்பதே சிறந்தது என்று சொன்னார். ஆக நம்மால் இயன்ற அளவு கல்வி கற்போருக்கு வேண்டிய உதவிகளை செய்வோம். அது பணமாகவே பொருளாகவோ அல்லது கல்வி தானம் வழங்கும் அறக்கட்டளைகளோடு இணைந்து செய்யும் சேவையாகவோ கூட இருக்கலாம். எந்த வகையாயிருப்பினும் கல்வி தானம் அழகாய் பிறர் வாழ்வை ஒளி வீசவே செய்யும். கல்வி தானம், நம்மை மேம்படுத்தும்,நம் சமூகத்தை மேம்படுத்தும். நம் எதிர்கால சந்ததிகளை மேம்படுத்தும்.

#இணையச் செய்தி


Pengarang :