ANTARABANGSA

37 ஆண்டுகள் ஆட்சி செய்த ரோபட் முகாபே பதவி துறந்தார்

உலகம், நவம்பர் 22:

கடந்த 37 ஆண்டுகள் ஆட்சி செய்த ஜிம்பாப்வே அதிபர் ரோபட் முகாபே தனது பதவியை துறந்ததாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடேண்டாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டில் பொது மக்கள் சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜிம்பாப்வே நாட்டை தனது சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்தி வந்த முகாபே ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது இயக்கத்தினரிடம் இருந்தும் பல்வேறு நெருக்கடியை எதிர் நோக்கி வந்த வேளையில், பதவி விலகல் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பொது மக்கள் சாலைகள் கரவொலி எழுப்பியும், வாகனங்களின் ஹோன் சத்தத்தை அழுத்தி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இந்த பதவி விலகல் அறிவிப்பு நாடாளுமன்றம் முகாபேயின் பதவியை பறிப்பதற்கு முன்பு எடுத்த நடவடிக்கை ஆகும்.

 

 

 

 

 

 

ரியூட்டர்ஸ் அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முகாபேயின் சுயமான பதவி விலகல் ஒரு இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்த இலகுவாக இருக்கும் என்று தெரிவித்தது.

#வீரத் தமிழன்

=EZY=


Pengarang :