SELANGOR

ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 5000 பேருக்கு பள்ளிச் சீருடை

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 20:

மந்திரி பெசார் இன்கோப்ரேசன் யாயாசான் சிலாங்கூருடம் இணைந்து சுமார் 5000 ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடையை வழங்கினார்கள்.பள்ளிக்கு போகலாம் திட்டத்தின் கீழ் அம்மாணவர்களுக்கு பள்ளிச் சீருடையை வழங்கியதாக அதன் தலைமை பொறுப்பாளர் ஜப்பாருடின் முகமட் அலி தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தை சார்ந்த ஒன்பது ஊராட்சி மன்றங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 111 ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். வழங்கப்பட்ட 5000 பள்ளிச் சீருடை அன்பளிப்பும் வருங்காலங்களில் தொடரும் என நம்புவதாகவும் அஃது வறுமைக்கோடு மற்றும் நடுதர வர்க்கத்தை சார்ந்த மாணவர்களுக்கு சென்றடைவதையும் உறுதி செய்யப்படும் என்றார்.

இந்த அன்பளிப்பு பெறும் மாணவர்களை அந்தந்தப் பள்ளி நிர்வாகம் தேர்வு செய்து பட்டியலை வழங்கியதாகவும் அதன் அடிப்படையில் சீருடைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களும் அவர்களின் குடும்ப வருமானம் உட்பட பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கூறிய அவர் பள்ளிச் சீருடை மட்டுமின்றி தேவையானவர்களுக்கு சமூக உதவிகளை வழங்குவதிலும் மந்திரி பெசார் இன்கோப்ரேசன் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை விவேகமாய் மேற்கொண்டும் வருவதாக கூறினார்.
மேலும்,மாநில அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு பரிவு மிக்க சமூக நலன் திட்டங்களும் அதன் இலக்கை எட்ட மந்திரி பெசார் இன்கோப்ரேசன் பெரும் பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிச் சீருடை வழங்கும் நிகழ்வில் மந்திரி பெசார் இன்கோப்ரேசனின் தலைமை செயல் முறை அதிகாரி சொப்வான் அப்பெண்டி அமினுடினும் யயாசான் சிலாங்கூரின் இடைக்கால தலைமை அதிகாரி ஷாஹூரா ஷக்ஃரியும் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளை எடுத்து வழங்கினார்கள்.

#வீரத் தமிழன்


Pengarang :