NATIONAL

இராணுவ வாக்காளர் பதிவு, ஆட்சேப புகாரை எஸ்பிஆர் நிராகரித்தது

பெஃரா, டிசம்பர் 5:

சுமார் 1234 இராணுவத்தினரை வாக்காளர்களாய் பெஃரா இராணுவ முகாமிற்கு மாற்றியது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேப மனுவை பகாங் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது என கெஅடிலான் கட்சியின் பெஃரா தலைவரும் மத்திய உச்சமன்ற உறுப்பினருமான ஷக்காரியா அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது புகார்தாரர் நோராஸ்லான் ஷய்னுடன் தாம் சென்றதாக கூறிய ஷக்காரியா விசாரணைக்கு பின்னர் பகாங் தேர்தல் ஆணையர் டத்தோ ஷம்ரி ஹம்லி ஆட்சேபத்தை செலவு தொகையுடன் தள்ளுபடி செய்வதாகவும் வாக்காளர்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் கூறியதாக விவரித்தார்.


இந்த ஆட்சேப மனு சம்மதப்பட்ட இராணுவ முகாமின் சூழலை வைத்து செய்யப்பட்டதாகவும் கூறிய அவர் அந்த இராணுவ முகாம் இன்னும் முழுமை அடையவில்லை.அஃது வரும் 2018இல் தான் முடிவடையும். இந்நிலையில் எப்படி அங்கு 1234 இராணுவத்தினர் வாக்காளர்களாய் பதிவு செய்யப்பட்டனர்.இஃது ஐயத்தை எழுப்புகிறது என்றார்.

விசாரணைக்கு பின்னர் ஆட்சேப மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக கூறிய தேர்தல் ஆணைய தலைவர் இராணுவ முகாமில் பதிவு செய்யப்பட்ட இராணுவத்தினரின் பதிவுகள் நம்பகத்தன்மையை கொண்டிருக்கும் நிலையில் சம்மதப்பட்ட முகாம் முழுமையான செயல்பாட்டில் இருப்பதாலும் இந்த ஆட்சேப மனுவை நிராகரிப்பதாகவும் அவர் கூறியதையும் ஷக்காரியா நினைவுக்கூர்ந்தார்.


இந்த முடிவினை எடுத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து பெரும் அதிர்ப்தி ஏற்பட்டிருபதோடு அஃது சுதந்திரமான நேர்மையான ஆணையம் என்பதில் ஐயம் எழுந்துள்ளதாகவும் ஷக்காரியா செய்தியாளர்களிடம் கூறினார்.

#தமிழ் அரசன்


Pengarang :