ANTARABANGSA

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் இஸ்ரேல் விவகாரம் விவாதிக்கப்படும்

நியுயோர்க், டிசம்பர் 20:

வரும் வியாழக் கிழமை நடைபெறவிருக்கும் ஐக்கிய கூட்டமைப்பு நாடுகளுக்கான பேரவைக்கூட்டத்தின் போது இஸ்ரேல் நாட்டின் தலைநகர் குறித்த விவாதம் மேற்கொள்ளப்படும் என அறியப்படுகிறது.

அமெரிக்க பிரதமர் டொனல் ட்ராம்ப்  பைய்துல்மஃடிஸ்யை இஸ்ரேலின் தலைநகராய் அறிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாளை கூடவிருக்கும் ஐக்கிய கூட்டரசு நாடுகளுக்கான உச்சகூட்டத்தில் இதுவொரு முக்கிய விவாதமாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாநாட்டில் சுமார் 139 நாடுகள் கலந்துக் கொள்ளும் வேளையில் அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக் கொள்ளும் துர்க்கி மற்றும் யமென் ஆகிய நாடுகள் இதனை முன் வைக்கலாம் என அனைத்துலக செய்தி பிரிவான ஏ.எப்.பி தெரிவித்தது.

இந்த அவசர சந்திப்பு குறித்து முன்னதாகவே ஐக்கிய கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அதன் தலைவர் மிருஸ்லவ் லஷ்சஃக் கடிதம் மூலம் 193 நாடுகளுக்கும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க
சுயட்சையாகவும் தனித்துவமாகவும் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. அஃது எவ்வித சட்டரீதியிலான அங்கிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதால் அமெரிக்காவின் முடிவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக அமெரிக்காவின் முடிவினை எதிர்த்து மெசிர் தனது கோரிக்கையை 14 நாடுகளின் ஆதரவோடு முன் வைத்துள்ள நிலையில் பலஸ்டினும் அத்தகையை கோரிக்கையை முன் வைத்துள்ளதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கைக்கு பெரும் ஆதரவு கிட்டும் எனவும் நம்பப்படுகிறது.

நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் எந்தவொரு பதற்றமும் ஐயமும் இன்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அமெரிக்காவின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு நிலைக்கொள்ளும் என்பது உறுதி.
உலகில் எந்தவொரு நாடும் தனித்துவ ஆளுமையை இந்த மாநாட்டில் கொண்டிருக்கவில்லை.ஆனால்,யு.என்.எஸ்.சி கூட்டமைப்பில் பிரிட்டன்,சீனா,பிரன்சிஸ்,ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியில் எந்தவொரு கோரிக்கையையும் முடக்கும் அதிகாரம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

#தமிழ் அரசன்


Pengarang :