NATIONAL

சமூக வலைத்தளங்களில் வெளியான, நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்திகளை நம்பாதீர்கள்!!!

ஷா ஆலம், டிசம்பர் 29:

நேற்று மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) சமூக வலைத் தளங்களில்  வெளியான நாடாளுமன்றம் கலைக்கப்படும் நாள் மற்றும் 14-வது பொது தேர்தல் வாக்களிப்பு நாள் போன்ற செய்திகள் உண்மையல்ல என்று உறுதிப் படுத்தியது. மேலும் இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாசிம் கூறுகையில், சமூக வலைத் தளத்தில் வெளியான செய்திகளில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் நாள் ஜனவரி 11 என்றும், வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் பிப்ரவரி 11 என்றும் வாக்களிப்பு நாள் மார்ச் 25 ஆகிய தகவல்கள் அடிப்படையற்றது என்று தெளிவுபடுத்தினார்.

 

 

 

 

 

 

”  இந்த செய்தி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆக, பொது மக்கள் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன். நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் பிரதமர் ஆலோசனையின் பேரில் மேன்மை தங்கிய மாமன்னரிடம் மட்டுமே உள்ளது,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#தமிழ் அரசன்


Pengarang :