SELANGORUncategorized @ta

சிலாங்கூருக்கு மத்திய அரசாங்கம் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

ஷா ஆலம், டிசம்பர் 10:

அடுத்த முறை வெளியிடும் வரவு செலவுத் திட்டத்தில் மத்திய அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மாநிலமாக திகழும் காரணத்தினால் மத்திய அரசாங்கம் இதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

”  சிலாங்கூர் மாநிலம் மிக அதிகமான வருவாயை மத்திய அரசாங்கத்திற்கு பெற்றுத் தருகிறது. ஆனால் மத்திய அரசாங்கமோ மிகச் சிறிய அளவிலான ஒதுக்கீட்டை நமக்கு கொடுக்கிறது. சிலாங்கூருக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி நியாயமான ஒன்றாக இல்லை. நான் அதிகமான நிதி ஒதுக்கீடு கேட்கத் தேவையில்லை ஏனெனில் மற்ற மாநிலங்களில் மேம்பாடு திட்டங்களை செயல்படுத்த அதிக நிதி தேவைப்படும். ஆனாலும் சிலாங்கூர் மாநிலத்திற்கு 10% கொடுக்க வேண்டும், மாறாக தற்போது மத்திய அரசாங்கம் சிலாங்கூருக்கு 1% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது,” என்று ஷா ஆலம், செக்சன் 7 அடுக்கு மாடிக் குடியிருப்பில் நடைபெற்ற ‘மக்களின் மீது அக்கறை’ சூறாவளி பயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது கூறினார்.

 

 

 

 

 

 

 


Pengarang :