SELANGOR

சிலாங்கூர்கூ வீடுகளை வாடகை விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!!!

ஷா ஆலம், டிசம்பர் 12:

சிலாங்கூர்கூ வீடுகளை வாங்கிய சில ஆண்டுகளிலே வாடகைக்கு விட்ட உரிமையாளர்கள் மீது சிலாங்கூர் மாநில அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமாட் கூறினார். வீடுகளை வாடகைக்கு விட்டதாக பல புகார்கள் வந்தன என்றும் இது மிக கவனமாக கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார். சிலாங்கூர்கூ வீடுகள் கட்டும்பணி செலவை விட குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்றார்.

சிலாங்கூர்கூ வீடுகளை வாடகைக்கு விட்டு இலாபம் ஈட்ட முயற்சிக்கும் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும் முதல் வீடுகள் வாங்க முயற்சியில் இறங்கி இருக்கும் மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்று விவரித்தார்.

 

 

 

 

 

சிலாங்கூர்கூ வீடுகள், குறிப்பாக ‘ஏ’ தர வீடுகள் ரிம 42,000-க்கு விற்கப்படுகிறது என்றும், ஆனால் இதன் கட்டுமான செலவு ரிம 75,000 ஆகும். ‘பி’ தர வீடுகள் ரிம 99,000-க்கு விற்கப்படுவதாகவும், ஆனால் இதன் கட்டுமான செலவு ரிம 194,000 ஆகும் என்று விவரித்தார்.


Pengarang :