SELANGOR

சிலாங்கூர் மாநில அரசை மாசுபடுத்த ஆலயத்தை பயன்படுத்தி ஆர்பாட்டம்

ஷா ஆலம், டிசம்பர் 21:

நேற்று காலை சிலாங்கூர் மாநில அரசாங்க தலைமையகத்தில் முன்பு நடைபெற்ற சீப்பீல்ட் ஆலய விவகாரம் குறித்த ஆர்பாட்டம் அரசியல் லாபத்திற்காக நடத்தப் பட்டதாக தெரிகிறது. மஇகா, மைபிபிபி, ஐபிஎப் மற்றும் தேசிய முன்னணியை சார்ந்த அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது இது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.

தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்கள் திரளாக கலந்து கொண்டதும் சிலாங்கூர் மாநிலத்திற்கு எதிரான பதாகைகளையும் ஏந்தி வந்தது இது ஒரு அரசியல் நாடகம் என்றே தோன்றுகிறது. 14-வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கும் என்று எதிர் பார்க்கும் வேளையில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்க சதிச் செயலாகவே இது அமைகிறது.

சரித்திரம் தெரியாதவர்கள் மறந்து விடலாம், ஆனால் 2008-க்கு முன்பே சீப்பீல்ட் ஆலய நிலத்தை கோட்டை விட்ட மஇகா மற்றும் தேசிய முன்னணியினர், இன்று நல்லப் பிள்ளை போல் நடித்துக் கொண்டிருப்பது மக்களுக்கு தெரியும் என்பதை இங்கு பதிவு செய்ய  விரும்புகிறோம்.

பல்வேறு சர்ச்சைக்குரிய ஆலய விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மஇகா இன்று அரசியல் நடத்திக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக மஇகா இளைஞர் பிரிவினர் குற்றச்சாட்டில் உண்மையில்லை. சிலாங்கூர் பாக்காத்தான் ஆட்சியில், மாநிலத்தில் 16 ஆலயங்கள் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளதை ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும். இதை விடுத்து, வெற்று அறிக்கையில் அரசியல் நடத்திக்கொண்டு இருக்கும் மஇகா இளைஞர் பிரிவினரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சீப்பீல்ட் ஆலய விவகாரம் குறித்து எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் படி நிலமும் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பெருமளவில் நிதியும் வழங்கப் பட்டுள்ளதை அனைவரும் பலன் அடைவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் அரசியல் சித்தாந்தங்களை கடந்து, வட்டார இந்துக்கள் பயனடைய புதிய ஆலயத்தை எழுப்ப நன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கு.குணசேகரன் குப்பன்
சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் துணை தகவல் பிரிவு தலைவர்


Pengarang :