SELANGOR

சுஹாய்மி: புக்கிட் அந்தாராபங்சாவில் போட்டியிட தகுதி உண்டா?

ஷா ஆலம், டிசம்பர் 5:

புக்கிட் அந்தாராபங்சா வாக்காளர்கள் விவேகமானவர்கள். அவர்கள் தங்களுக்கான பிரதிநிதியை மிகவும் துள்ளியமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தேர்ந்தெடுக்க ஒருபோது தவறியதில்லை என சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுஹாய்மி தெரிவித்தார்.


புக்கிட் அந்தாராபங்சாவில் நாட்டின் சர்ச்சைக்குரிய அம்னோவின் அரசியல்வாதி டத்தோஸ்ரீ ஜமால் யுனுஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து சுஹாய்மி கீழ்கண்டவாறு சில கேள்விகளையும் மக்களின் உணர்வுகளையும் முன் வைத்தார்.

புக்கிட் அந்தாராபங்சா வேட்பாளர் தகுதி பிி்ன்வருமாறு இருக்க வேண்டும் :-

1.கல்வியாளர்களும் உயர்நிலை கல்வியாளர்களும் குடியிருப்பதால் நிபுணத்துவ தொழிலியல் சார்ந்தவராய் இருத்தல் வேண்டும்.

2.நிர்வாகத்திறன் கொண்டவராகவும் அனுபவம் நிறைந்தவராகவும் இருத்தல் வேண்டும்.கோமாளியை போல் தோற்றமும் வித்தை காட்டுபவராகவும் இருத்தல் கூடாது.

3.தலைவருக்கான தோற்றத்தை கொண்டிருப்பதோடு வெளிப்படையான கருத்தினை ஏற்றுக் கொள்பவராகவும் பல்வேறு கருத்துகளுக்கு இடம் அளிப்பவராகவும் இருத்தல் அவசியம்.மேலும்,உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காமல் விவேகமாய் முடிவெடுப்பவராய் இருக்க வேண்டும்.

4.ஜமால் போன்றவர்கள் புக்கிட் அந்தாராபங்சா மட்டுமில்லை வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட தகுதியற்றவர்.ஜமால் தீவிரவாதப் போக்குடையவர்.அவர் சிலாங்கூர் மாநிலத்திற்கு ஏற்புடையவர் அல்ல.

5.இருப்பினும் எந்த தொகுதிதிலும் அவர் விரும்பும் தொகுதியில் போட்டியிடுவது ஜமாலின் சுயவிருப்பம்.ஆனால்,அம்னோ தலைமைத்துவம் ஜமால் மீது நம்பகத்தன்மையை கொண்டிருக்காது.வேட்பாளர் நிலையில் ஜமாலை தேர்வு செய்யாது.ஜமால் போன்றவர்கள் வேட்பாளரானால் வைப்புத் தொகையை அது இழக்கும்.
இவ்வாறு சுஹாய்மி ஜமாலின் விருப்பத்திற்கு பதிலடிக் கொடுத்தார்.ஜமால் போன்றவர்கள் மக்களை பிரதிநிதிக்க தகுதியற்றவர்கள் என்பதை அவர் இதன் மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் அரசன்


Pengarang :