Uncategorized @ta

செய்திகளை பரப்பும் முன், அது நம்பகத்தகுந்ததா என்று உறுதி செய்யுங்கள்!!!

ஷா ஆலம், டிசம்பர் 26:

சமூக வலைத் தளத்தில் பல்வேறு தகவல்களை அறிந்து வைத்திருப்பது நல்லது ஆனாலும் உண்மையற்ற செய்திகள் பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கும் என்று ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ தெரிவித்தார். பொய்யான தகவல்களை பரப்பி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைவதுடன் மனச் சஞ்சலம் ஏற்படும் என்று கூறினார்.

”  செய்திகளின் உண்மையை உறுதிச் செய்யுங்கள். அண்மையில் எனக்கு ரவாங் விரைவு நெடுஞ்சாலையைப் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதிலும் குறிப்பாக புதிதாக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை இடிந்து விழுந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான மற்றும் பொறுப்பற்ற செய்திகளை பரப்புவது பொது மக்களை பீதி அடையச் செய்வது மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாவின்  நேரம் மற்றும் அதன் செயல்பாடுகளையும் பாதிக்கும்,” என்று கான் பெய் நீ தெரிவித்தார்.

ரவாங் சட்ட மன்ற மக்களுக்கு நன்கு சேவையை வழங்கி வரும் கான் பெய் நீ செராண்டா-செலாயாங் சாலை இடையே மண்சரிவு ஏற்பட்டதாக சமூக வலைத் தளங்களில்  வெளியான பொய் தகவல்களை மேற்கோள்காட்டி இப்படி கூறினார்.

இதனிடையே, பொதுப்பணித்துறை இந்த செய்தியை மறுத்ததுடன் ஐந்து பேர்கள் இறந்துவிட்டதாக கூறியதை பொய் என்று விவரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2016-இல் இகுவாடோர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எடுக்கப் பட்ட படங்கள் என்று உறுதிப் படுத்தியது.

#தமிழ் அரசன்

=EZY=


Pengarang :