NATIONAL

தொகுதி மறுசீரமைப்பு: மாநில அரசாங்கம் தொடர்ந்து மேல்முறையீடு செய்யும்

புத்ரா ஜெயா, டிசம்பர் 18:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) சிலாங்கூரில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை தொடர மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று  அனுமதி வழங்கியுள்ளது. மூன்றில் இரண்டு நீதிபதிகள் கடந்த டிசம்பர் 7-இல் உயர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து மேல்முறையீடு செய்யும் என்றும் மாநில வாக்காளர்கள் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமையை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்படும் என்று மாநில சுற்றுலா, பசுமை தொழில் நுட்பம், பயனீட்டாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார்.

”  மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் இந்த தீர்ப்பை பார்க்கும் பொழுது சரவாக்கை சேர்ந்த பெண் நீதிபதி டத்தோ ரோட்ஸாரியா பூஜாங் நமது வாதத்தில் நியாயம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், இது புள்ளி விவரங்கள் அடங்கியது மட்டுமே. ஆனால், வாக்காளர்களின் உரிமைகள் நிஜம் என்றும் சிலாங்கூரில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மற்றும் தேசிய முன்னணி வெற்றியடைய மேற்கொள்ளும் நடவடிக்கை,” என்று நீதிமன்ற தீர்ப்புக்கு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

#வீரத் தமிழன்


Pengarang :