SELANGOR

பாக்காத்தான் சார்ந்த விசாரணைகளில் ஆர்வம் காட்டுவது ஏன்?

ஷா ஆலம், டிசம்பர் 7:

மலேசிய லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையம் தொடர்ந்து பாக்காதான் ஹராப்பான் சார்புடையவர்களை மட்டுமே பெரும்பான்மையாக சார்ந்திருப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளில் மட்டுமே அந்த ஆணையம் ஆர்வம் காட்டுவதாகவும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் சுஹாய்மி ஷாஃபி தெரிவித்தார்.

அரசாங்கம் சார்ந்த கைதுகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்தாலும் அதனை தொடர்ந்து மக்கள் விமர்சனம் செய்து வருவதையும் சுட்டிக்காண்பித்த சுஹாய்மி அந்த ஆணையத்திற்கான தலைமை பொருப்பாளர்களை நியமனம் செய்யும் நடைமுறைகள் இயல்பான அதன் செயல்முறையினை கொண்டிருப்பதோடு அந்த ஆணையம் முழுமையாக சுதந்திரமாகவும் செயல்பட வழிகோல வேண்டும் என்றார்.மேலும்,அந்த ஆணையம் வெளிப்படையான விசாரணையையும் தொழிமுறையையும் மட்டுமின்றி நேர்மையாகவும் நேர்த்தியாகவும் இருத்தல் வேண்டும்.அதுவே,மக்கள் மத்தியில் சம்மதப்பட்ட ஆணையத்தின் மீதிலான நம்பிக்கையை வலுப்படுத்தும் என்றார்.

நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அந்த ஆணையம் அதன் விசாரணையையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் அவர்களின் விசாரணை அரசியல் நோக்கம் உடையதாக இருத்தல் கூடாது என்றும் விவரித்தார்.இத்தகைய போக்கினை அவர்கள் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.இதற்கிடையில்,அந்த ஆணையத்தின் இயக்குநர் மீதிலான நன்னெறி குற்றச் சாட்டு தொடர்பில் இன்னும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாத நிலையில் அதனை முதலில் அவர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார்.

அதேவேளையில்,அந்த ஆணையத்தின் இயக்குநர் நியமனத்தை நாடாளுமன்ற வழிமுறையை சார்ந்தும் சுதந்திரமான சூழலிலும் இருத்தல் வேண்டும் என்றார். தொடர்ந்து விவரித்த அவர் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையத்தின் தலைமை இயக்குநர்களின் நியமனம் நம்பகத்தன்மையை சார்ந்த தேர்வின் மூலமும் நாடாளுமன்றத்தின் சுயட்சை குழுவின் மூலமும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறிய சுஹாய்மி இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான தேர்வுகள் வழி மேற்கொள்ளப்படும் நியமனம் அந்த ஆணையத்தின் இயக்குநர் மற்றும் அதன் முதன்மை பொருப்பாளர்களின் செயல்பாடுகள் விவேகமாகவும் நம்பகத்தன்மையோடும் இருப்பதை அஃது உறுதி செய்யும் நிலையில் அவர்கள் தத்தம் பணிகளை கடமையுணர்வோடு மேற்கொள்வதையும் அஃது உறுதி செய்யும் என்றும் நினைவுறுத்தினார்.

#தமிழ் அரசன்


Pengarang :